டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராகுல் அடுத்த அதிரடி.. தேர்தலில் வென்றால் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும்.. வாக்குறுதி!

லோக்சபா தேர்தலில் வென்று ஆட்சிக்கு ஆட்சிக்கு வந்தால் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: லோக்சபா தேர்தலில் வென்று ஆட்சிக்கு ஆட்சிக்கு வந்தால் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தல் பரபரப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகிறது. முக்கியமாக காங்கிரஸ் கட்சி புதிது புதிதாக நிறைய வாக்குறுதிகளை அளித்து தேர்தல் களத்தை சூடாக வைத்து இருக்கிறது.

இந்த நிலையில் இன்று கேரளாவில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெண்களை மையமாக வைத்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

 கடன் தள்ளுபடி

கடன் தள்ளுபடி

ராகுல் காந்தி தனது பேச்சில், காங்கிரஸ் கட்சி ஐந்து மாநில தேர்தலில் மூன்று மாநிலங்களில் வென்றது. அங்கு நாங்கள் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தொடங்கி உள்ளோம். ஏற்கனவே விவசாய கடன்களை தள்ளுபடி செய்துள்ளோம்.

 பெண்கள் முக்கியம்

பெண்கள் முக்கியம்

தேர்தலில் பெண்களும் இளைஞர்களும் அதிகம் வாக்களிக்க வேண்டும். இவர்கள் தேர்தலில் பங்கு கொள்வதே நாட்டிற்கு நல்லது. இளைஞர்களுக்கு மட்டும் அதிக கவனம் செலுத்தி வேலைவாய்ப்பை உருவாக்குவோம். பிரதமர் மோடி 2 கோடி வேலைவாய்ப்பை உருவாக்கியதாக பொய் சொல்லியுள்ளார்.

 என்ன வேலை

என்ன வேலை

மத்தியில் காங். ஆட்சிக்கு வந்தால் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு முன்னுரிமை அளித்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மசோதா பெண்களுக்கு அதிக உரிமைகளை அளிக்கும். ஆட்சிக்கு வந்ததும் இதை நிறைவேற்றுவோம் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

 அதிரடி திட்டம்

அதிரடி திட்டம்

ஏற்கனவே இந்தியாவில் உள்ள அனைத்து ஏழைகளுக்கும் சமமாக குறைந்தபட்ச வருமானம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இது உடனடியாக நிறைவேற்றப்படும் என்று கூறியுள்ளார். இப்போது ராகுல் இப்படி அறிவித்து இருப்பது இன்னொரு அதிரடி நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

English summary
Rahul's next surgical strike: We will bring women reservation quota says Congress Chief in Kerala.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X