காங். தலைவராக ராகுல் காந்தி தொடர்ந்து நீடிப்பார்!
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே தொடர்ந்து நீடிப்பார் என அக்கட்சியின் செய்தித் தொடர்பாள சுர்ஜிவாலா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஏ.கே. அந்தோணி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட் மற்றும் ஹரியானா சட்டசபை தேர்தல்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

மேலும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் மாநிலங்களுக்கான பொதுச்செயலர்கள் கூட்டத்தை கூட்டவும் தீர்மானிக்கப்பட்டது. லோக்சபா தேர்தலுக்காக அமைக்கப்பட்ட குழுவும் விரைவில் கலைக்கப்பட இருக்கிறது. அத்துடன் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகக்க் கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டது.
இதனால் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே நீடிப்பார் என செய்தியாளர்களிடம் பேசிய சுர்ஜிவாலா திட்டவட்டமாக கூறினார். முன்னதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ரேபரேலி தொகுதிக்கு சென்றார்.
தமக்கு தொடர்ந்து வாக்களித்து எம்.பி.யாக வெற்றி பெற வைக்கும் அத்தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தார் சோனியா காந்தி.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications