அடுத்தடுத்த அதிரடி- கேசிஆர் மகளிடம் அமலாக்கப் பிரிவு விசாரணை- தேஜஸ்வி யாதவுக்கு சிபிஐ சம்மன்!
டெல்லியில் கேசிஆர் மகள் கவிதாவிடம் விசாரணை நடைபெறுகிறது; லாலு மகன் தேஜஸ்விக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
டெல்லி: ரயில்வே பணிகளுக்கு நிலம் பெற்ற வழக்கு விவகாரத்தில் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவை விசாரணைக்கு அழைத்து சம்மன் அனுப்பி உள்ளது சிபிஐ. மேலும் மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில் தெலுங்கானா முதல்வர் கேசிஆர் மகள் கவிதாவிடம் இன்று அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.
பாஜக அல்லாத எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது பல்வேறு வழக்கு விசாரணைகள் துரிதப்பட்டு வருகின்றன. டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதே வழக்கில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கும் தொடர்பு இருக்கிறது என்கிறது அமலாக்கப் பிரிவு. இதனால் கவிதாவை விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியது அமலாக்கப் பிரிவு. ஆனால் தமது வீட்டுக்கு வந்து அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தட்டும் என பதில் அனுப்பினார் கவிதா. இதனை அமலாக்கப் பிரிவு ஏற்க மறுத்தது.
இதனையடுத்து டெல்லியில் உள்ள அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் இன்று கவிதா விசாரணைக்காக ஆஜராகினார். அவரிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக டெல்லியில் சந்திரசேகர ராவின் இல்லத்துக்கு கவிதா, பாரத் ராஷ்ட்ரிய சமிதியின் மூத்த தலைவரான அவரது சகோதரர் கே.டி. ராமாராவ் வருகை தந்தனர். மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஏற்கனவே மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதைப் போல கவிதாவும் பல மணிநேரம் விசாரணைக்கு பின் கைது செய்யப்படலாம் எனவும் தகவல் பரவியது. இதையடுத்து டெல்லி கேசிஆர் இல்லம் முன்பாக பெருமளவும் பாரத் ராஷ்ட்ரிய சமிதி தொண்டர்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவுகிறது.
முன்னதாக, நாட்டின் 9 மாநிலங்களில் புறவாசல் வழியாக பாஜக நுழைந்துள்ளது; ஆனால் தெலுங்கானாவில் பாஜகவால் நுழைய முடியவில்லை. ஆகையால் என்னை பழிவாங்குகிறது பாஜக; அதனாலேயே அமலாக்கப் பிரிவு விசாரணை நடைபெறுகிறது என கூறியிருந்தார் கவிதா. இந்த நிலையில் கவிதாவிடம் விசாரணை நடைபெறுகிறது.
இதேபோல் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவும் இப்போது சிபிஐ விசாரணை வளையத்தில் சிக்கி இருக்கிறார். ரயில்வே நிலம் தொடர்பான வழக்கில் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி இருந்தனர். இது தொடர்பான வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர்கள் லாலு பிரசாத் யாதவ், ராப்ரிதேவி உட்பட 14 பேர் மீதுஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ்சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் ஆஜராக வேண்டும் என தேஜஸ்வி யாதவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. அடுத்தடுத்து எதிர்க்கட்சி தலைவர்கள் மீதான வழக்கு விசாரணை, கைது நடவடிக்கைகள், ரெய்டுகள் தொடருவதால் தேசிய அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications