Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமெரிக்க நிறுவனங்களுக்கு ஆப்பு.. ரயில்வே எடுத்த முக்கிய முடிவு.. Zohoவுக்கு அடித்த ‛லக்’

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ரயில்வே துறையில் மைக்ரோசாப்ட், கூகுள் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்களின் பிளாட்பார்ம்களை பயன்படுத்துவதற்கு பதில் இந்தியாவின் ஜோஹோ நிறுவனத்தின் பிளாட்பார்ம்களை பயன்படுத்த உள்ளதாக மத்திய ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையின் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அதிரடியாக அறிவித்துள்ளார். உள்ளூர் பொருட்களுகளை அதிகமாக பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வைத்த கோரிக்கையை ஏற்று அஸ்வினி வைஷ்ணவ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரி விதித்தது மற்றும் எச் 1பி விசாவின் கட்டணத்தை உயர்த்தி இந்திய ஐடி ஊழியர்களை அமெரிக்காவுக்கு செல்வதை தடுப்பது உள்ளிட்டவற்றுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த அறிவிப்பை அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக மத்திய ரயில்வே, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையின் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

railway-switched-to-an-indian-platform-zoho-instead-of-microsoft-and-google-says-ashwini-vaishanw

ஜோஹோ பக்கம் செல்லும் அமைச்சர்

‛‛நான் ஜோஹோவை நோக்கி நகர்கிறேன். எனது டாக்குமென்ட்ஸ், ஸ்பிரிட்ஷீட் மற்றும் பிரசென்டேஷன் உள்ளிட்டவர்களுக்கு ஜோஹோ நிறுவனத்தின் பிளாட்பார்மை பயன்படுத்த முடிவு செய்துள்ளேன்.

அதேபோல் பிரதமர் மோடியின் சுதேசி அழைப்பில் அனைவைரும் சேர்ந்து இந்திய தயாரிப்பு மற்றும் சேவைகளை பயன்படுத்த வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

ஸ்ரீதர் வேம்பு நன்றி

இதனை ஜோஹோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு நன்றி தெரிவித்து வரவேற்றுள்ளார். இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛"நன்றி சார், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்து வரும் எங்கள் இன்ஜினியர்களுக்கு பெரிய மன உறுதியை வழங்கும். நாங்கள் உங்களைப் பெருமைப்படுத்துவோம். நம் தேசத்தை பெருமைப்படுத்துவோம். ஜெய் ஹிந்த்" என்று கூறியுள்ளார்.

பின்னணி என்ன?

பொதுவாக டாக்குமென்ட், ஸ்பிரிட்ஷீட், பிரசென்டேஷன் உள்ளிட்டவற்றுக்கு மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் நிறுவனங்களின் பிளாட்பார்ம்கள் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இனி அதனை பயன்படுத்த மாட்டேன். அதற்கு பதிலாக தமிழகத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜோஹோ நிறுவனத்தின் சாப்ட்வேர்களை பயன்படுத்துவேன் என்று அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் 50 சதவீத வரி விதிப்பு, எச் 1பி விசாவுக்கான கட்டண உயர்வு உள்ளிட்டவற்றால் பிரதமர் மோடி உள்ளூர் பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும். சுதேசி முறையில் அனைவரும் செயல்பட வேண்டும் என்று கூறினார். அதனடிப்படையில் அஸ்வின வைஷ்ணவ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஜோஹோ தயாரிப்பு என்ன?

மேலும் அஸ்வினி வைஷ்ணவ் கூறிய ஜோஹோ நிறுவனம் தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீதர் வேம்பு மற்றும் டோனி தாமஸ் ஆகியோரால் கடந்த 1996ம் ஆண்டு சென்னையை தலைமையிடமாக கொண்டு தொடங்கப்பட்டது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மைக்ரோசாப்ட் ஆபிஸ் 365 (Microsoft Office 365) மற்றும் கூகுள் வொர்க்ஸ்பேஸ்(Google Workspace) போன்ற தயாரிப்புகளை ஜோஹோ நிறுவனமும் ஜோஹோ வொர்க்பிளேஸ் (Zoho Workplace)மற்றும் ஜோஹோ ஆபிஸ் சூட் (Zoho Office Suite)வழங்கி வருகிறது.

Made In India-வில் ஜோஹோ

இப்போது இந்த ஜோஹோ நிறுவனம் தற்போது முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. இந்த நிறுவனம் பிசினஸ், Spanning இமெயில், எச்ஆர், அக்கவுண்ட்டிங், சிஆர்எம், புராஜெக்ட் மேனேஜ்மென்ட் உள்பட 80 க்கும் அதிகமான கிளவுட் அடிப்படையில் டூல்ஸ்களை (cloud-based tools) வழங்கி வருகிறது.

அதுமட்டுமின்றி ஜோஹோ தொடக்கம் முதலே 'Made in India' கொள்கையை கொண்டுள்ளதோடு, கிராமப்புற மாணவ-மாணவிகளை ஐடி துறையில் ஜொலிக்க வாய்ப்பு வழங்கி வருகிறது. இதனை அடிப்படையாக வைத்து தென்காசி மாவட்டம் மத்தளம்பாறையில் உள்ள ஜோஹோ ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

150 நாடுகளில் பயன்பாடு

இந்த ஜோஹோ நிறுவனம் ஆண்டுக்கு 1 பில்லியன் டாலர் வருமானத்தை ஈட்டி வருகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவிலும் இந்த நிறுவனம் இஙய்கி வருகிறது. ஜோஹோ நிறுவனத்தின் தயாரிப்புகளை 150க்கும் அதிகமான நாடுகளில் 100 மில்லியன் பேர் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+