பாஜகவிலிருந்து எதிர்ப்பு குரல்.. 'இந்தியாதான் முக்கியம்:' விலைவாசி உயர்வு பற்றி சுப்பிரமணியன் சுவாமி
டெல்லி: பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் நாட்டின் பொருளாதாரம் மோசமடையப் போகிறது என்று எச்சரித்துள்ளார் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி.
கடந்த சில மாதங்களாகவே நாடு முழுக்க பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து விண்ணை மூட்டி தினம் தினம் புதிய உச்சம் தொட்டு வருகிறது.
GDP எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியை பெருக்குவோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தது பாஜக. ஆனால் கேஸ், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலைதான் உயர்த்தப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு எழ ஆரம்பித்துள்ளது.

விலையேற்றம்
கொரோனா காலத்தில் மக்களிடம் பணப் புழக்கம் இல்லை. இருக்கும் கொஞ்ச பணமும் பெட்ரோல், டீசல், கேஸ் விலையேற்றம் மற்றும் இவற்றால் ஏற்படும் பிற விலைகளின் ஏற்றத்தால் காலியாகிவிடுகிறது என கதறுகிறார்கள் ஏழை, எளிய மக்கள்.

சுப்பிரமணியன் சுவாமி
இந்த நிலையில்தான், பாஜக சீனியர் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுப்பிரமணியன் சுவாமி, அரசுக்கு அட்வைஸ் செய்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறுகையில், நேர்மையான இந்திய மக்களுக்கு இந்த பெட்ரோல், டீசல் மற்றும் பிற எரிபொருள் விலை ஏற்றம் என்பது, பெரும் அவலமாகும். பொருளாதாரம் மீள வேண்டுமானால் மக்கள் கையில் பணம் வேண்டும். ஆனால் மக்களின் வாங்கும் சக்தியை இந்த விலையேற்றங்கள் குறைத்து நாட்டு பொருளாதார மீட்பை மேலும் கஷ்டமாக்கிவிடும். இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தியா முதலில்
இதனிடையே, நெட்டிசன் ஒருவர், நீங்களும் இதில் ஒரு கூட்டாளிதான் என்பதை உணரவில்லையா என்று கேள்வி எழுப்ப, அதற்கு பதிலளித்துள்ள சுவாமி, நான் இந்திய நாட்டுக்குதான் முதல் பங்காளி என்று கூறியுள்ளார். அதாவது நாடுதான் எனக்கு கட்சியை விட பெரிது என்ற பொருளில் சு.சாமி பதில் அளித்துள்ளார்.
Recommended Video

சாதனை
நீங்கள் சொல்வது தவறு ... கடந்த 7 ஆண்டுகளில் மோடிஜி எதை உருவாக்கியுள்ளார் என்பதற்கான அறிகுறி இது: பெட்ரோல் விலை செஞ்சுரி போட்டுள்ளது. 103 ரூபாய். செஞ்சுரி அடிக்கும் நிலையில் டீசல். 1000 ரூபாய்க்கு செல்லும் வழியில் எல்பிஜி சிலிண்டர்.
மேலே உள்ள அனைத்தும் மோடிஜி கடின உழைப்பின் விளைவாகும் என்று கிண்டல் செய்துள்ளார் ஒரு நெட்டிசன்.












Click it and Unblock the Notifications