Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடாவில் 5 ஆயிரம் பேருக்கு வேலை.. டிகிரி போதும்! சூப்பர் சான்ஸ்.. விட்றாதீங்க
சென்னை: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் (Bank of Baroda) பயிற்சி பணியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 5,000 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். இது குறித்த விவரங்களை இங்கு விரிவாக காணலாம்.
நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக பேங்க் ஆப் பரோடா உள்ளது. குஜராத் மாநிலம் வதோராவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் இந்த வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. இந்த வங்கியில் சிறப்பு பயிற்சிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணியிடங்கள் விவரம்:
மொத்தம் 5 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்தப் பயிற்சி பணியாளர் பதவிக்கு ஒரு வருட காலம் பயிற்சி வழங்கப்படும். நாடு முழுவதும் உள்ள வங்கிக் கிளைகளில் பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும். மாநில வாரியாக பார்க்கும் போது, குஜராத் மாநிலத்தில் 960 இடங்களும், உத்தரப் பிரதேசத்தில் 764 இடங்களும், மகாராஷ்டிரா 580 இடங்களும், கர்நாடகா 483 இடங்களும், ராஜஸ்தான் 412, தமிழ்நாடு 199 பணியிடங்கள்,
மேற்கு வங்கம் 194 இடங்களும், ஆந்திரப் பிரதேசம் 188 இடங்களும், பீகார் 179 இடங்கள், மத்தியப் பிரதேசம் 136 இடங்களும், சத்தீஸ்கர் 122 இடங்களும் உள்ளன. கேரளா 111, ஒடிசா 92 இடங்கள் என நாடு முழுக்க மொத்தம் 5 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வித் தகுதி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
மே 01, 2026 நிலவரப்படி வயது வரம்பு கணக்கிடப்படும். பொதுப் பிரிவினர் குறைந்தபட்சம் 20 வயதும், அதிகபட்சம் 28 வயதும் இருக்க வேண்டும்.
பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு ஐந்து ஆண்டுகள் வயது சலுகை உண்டு. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மூன்று ஆண்டுகள் வயது வரம்பு தளர்வு அளிக்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்குப் பிரிவின் அடிப்படையில் 10 முதல் 15 ஆண்டுகள் சலுகை உண்டு.
தேர்வு முறை மற்றும் கட்டணம்
பொது/நிதிசார் விழிப்புணர்வு, பகுத்தறிவுத் திறன், கணினி அறிவு, பொது ஆங்கிலம் ஆகியவை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பொது/நிதிசார் விழிப்புணர்வு, பகுத்தறிவுத் திறன், கணினி அறிவுப் பிரிவுகள் இந்தி அல்லது ஆங்கிலத்தில் இருக்கும். பொது ஆங்கிலப் பகுதி ஆங்கிலத்தில் மட்டுமே இடம்பெறும். இத்தேர்வில் தவறான பதில்களுக்கு எவ்வித மதிப்பெண்களும் குறைக்கப்படாது. உள்ளூர் மொழித் தேர்வும் இதில் அடங்கும்.
விண்ணப்பக் கட்டணம்
பட்டியல் சாதியினர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 200/- ஆகும். பொது, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய, இதர பிற்படுத்தப்பட்ட பெண் விண்ணப்பதாரர்கள் ரூ. 600/- செலுத்த வேண்டும். திருநங்கைகளுக்கும் இதே கட்டணம் பொருந்தும்.
பொது, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய, இதர பிற்படுத்தப்பட்ட ஆண் விண்ணப்பதாரர்கள் ரூ. 800/- செலுத்த வேண்டும். அனைத்து கட்டணங்களும் ஆன்லைன் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இன்று முதல் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பம் சமர்ப்பிக்க ஜூன் 8, 2026 அன்று கடைசி நாள் ஆகும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://bankofbaroda.bank.in/ மூலம் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://bankofbaroda.bank.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/2026/26-05/19-05-2026-Advertisement-Apprenticeship-18-17.pdf














Click it and Unblock the Notifications