குடியரசு தலைவர் மாளிகையில் தமிழர் சிலை.. டெல்லியில் இன்று ராஜாஜி சிலை திறப்பு!
டெல்லி: டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று ராஜாஜி உட்சவ் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி குடியரசுத் தலைவர் மாளிகையில் ராஜாஜி சிலை திறந்து வைக்கப்பட்டது. பிரிட்டிஷ் கட்டிடக் கலைஞர் எட்வின் லூட்யன் சிலை அகற்றப்பட்ட இடத்தில் ராஜாஜிக்கு சிலை கட்டப்பட்ட நிலையில், அந்தச் சிலை இன்று திறந்து வைக்கப்பட்டது.
டெல்லியில் மத்திய அரசு சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இதில் ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட கட்டுமானங்கள் மெல்ல விலக்கிக் கொள்ளப்படுகிறது. அதற்குப் பதிலாகப் புதிய கட்டுமானங்கள் நடந்து வருகிறது. ஏற்கனவே மத்திய அமைச்சரவைச் செயலகம், பிரதமா் அலுவலகம் உள்ளிட்டவை மாற்றப்பட்டுள்ளன.

சிலை அகற்றம்
மேலும், அங்கு இருந்த பிரிட்டிஷ் அதிகாரிகள் சிலைகளும் அகற்றப்பட்டு, அதற்குப் பதிலாக இந்திய விடுதலைக்காகப் போராடியவர்களின் சிலைகள் நிறுவப்பட்டு வருகிறது. அதன்படி குடியரசுத்தலைவா் மாளிகையில் எட்வின் லூட்யன் அகற்றப்பட்டது. டெல்லியில் உள்ள முக்கிய அரசு கட்டிடங்களான குடியரசுத்தலைவா் மாளிகை, செளத் பிளாக், நாா்த் பிளாக் ஆகியவற்றை வடிவமைத்தவர் இந்த எட்வின் லூட்யன்! அவரது நினைவாகக் குடியரசு மாளிகையில் அவருக்குச் சிலை அமைக்கப்பட்ட நிலையில், அது அகற்றப்பட்டது.
ராஜாஜி சிலை
அந்த இடத்தில் தான் நாட்டின் முதல் மற்றும் கடைசி கவர்னர் ஜெனரலான ராஜாஜிக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது. அந்தச் சிலையின் திறப்பு விழா இன்று நடைபெற்றது.. குடியரசுத் தலைவர் மாளிகையில் ராஜாஜி சிலை திறப்பு விழா நடைபெற்றது. நண்பகல் 12 மணியளவில் இந்தச் சிலை திறப்பு விழா நடைபெற்றது. குடியரசு தலைவர் ராஜாஜி சிலையை திறந்து வைத்தார். இந்தியாவின் கவர்னர் ஜெனரல், மத்திய உள்துறை அமைச்சர், மேற்கு வங்க கவர்னர், மெட்ராஸ் மாகாண முதல்வர் என்று பல்வேறு பதவிகளைக் கவனித்தவர் ராஜாஜி என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜாஜி சிலை திறப்பு குறித்த அறிவிப்பைப் பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று 'ராஜாஜி உட்சவ்' நடைபெறும் என்பதைப் பிரதமர் மோடி நேற்று தனது மன் கி பாத் உரையில் அறிவித்தார். காலனித்துவக் கால சின்னங்களைக் கைவிட்டு, இந்தியக் கலாச்சாரம் மற்றும் வரலாற்றில் ஆழமாக வேரூன்றிய அடையாளங்களை ஏற்றுக்கொள்வதே இதன் நோக்கம் என்று அவர் வலியுறுத்தினார்.
பிரதமர் மோடி அறிவிப்பு
பிரதமர் மோடி மேலும் பேசுகையில், "இதற்கு முன்பே நான் இது குறித்துப் பேசியுள்ளேன். நாம் அடிமைத்தன மனப்பான்மையிலிருந்து விடுதலைப் பெற வேண்டும்.. இன்று, அடிமைத்தனத்தின் சின்னங்களை விட்டுவிட்டு, இந்தியக் கலாச்சாரத்துடன் தொடர்புடைய சின்னங்களுக்கு நாடு மதிப்பளிக்கத் தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக நமது குடியரசுத் தலைவர் மாளிகையும் இந்தத் திசையில் ஒரு முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளது.
குடியரசுத் தலைவர் மாளிகையில் 'ராஜாஜி உட்சவ்' கொண்டாடப்படும். இந்த நிகழ்வில், சி. ராஜகோபாலாச்சாரிஜியின் சிலை, குடியரசுத் தலைவர் மாளிகையின் புல்வெளிப் பகுதியில் திறந்து வைக்கப்படும். அவர் சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல் ஆவார்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications