சொந்தக்காரங்க பாவம், முன் ஜாமீன் மனுவை சீக்கிரம் விசாரிங்க! உச்சநீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி மனு
டெல்லி: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் புதியதொரு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்தவர் கே.டி. ராஜேந்திர பாலாஜி. ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் 3 கோடி ரூபாயை மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் முன் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நிலையில் டிசம்பர் 17-ஆம் தேதி அந்த மனு தள்ளுபடி செய்தது.

தலைமறைவு
இதையடுத்து ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்படுவார் என்றதும் அவர் கடந்த வெள்ளிக்கிழமை (டிச.17) முதல் தலைமறைவானார். அவரை பிடிப்பதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ராஜேந்திர பாலாஜியின் வீடு, உறவினர்கள் வீடு, நண்பர்கள் வீடுகளில் அவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

சோதனை
ராஜேந்திர பாலாஜியுடன் போனில் பேசிய 600 பேரின் எண்களை வைத்தும் போலீஸார் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவை கேரளா, கொடைக்கானல், கோவைக்கு விரைந்துள்ளன. ராஜேந்திர பாலாஜி பெங்களூரில் தலைமறைவாக இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு ஏற்கெனவே ஒரு தனிப்படை முகாமிட்டுள்ளது.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜியை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி முன் ஜாமீன் மனுவை தாக்கல் செய்திருந்தார். இதனிடையே அவரது இருப்பிடம் குறித்து அவரது உறவினர்களிடம் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் இன்றைய தினம் புதியதொரு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

முன்ஜாமீன் மனு
அதில் "நான் எங்கே என கேட்டு எனது உறவினர்களை இரவு நேரங்களில் கூட தொந்தரவு செய்து துன்புறுத்தப்படுவதால் தனது முன்ஜாமீன் மனுவை விரைந்து விசாரிக்குமாறும்" புதியதொரு மனுவை ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீது விசாரணை நடத்தப்பட்டு அவருக்கு ஜாமீன் கிடைக்குமா இல்லை மனு தள்ளுபடி செய்யப்படுமா என்பது தெரியவில்லை.
-
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்!












Click it and Unblock the Notifications