"142".. ராஜீவ் காந்தி வழக்கில் அதிகாரத்தை கையில் எடுத்த உச்ச நீதிமன்றம்! 6 பேர் விடுதலையானது எப்படி?
டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்தது போலவே இன்னும் 6 பேரை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக முக்கியமான அதிகாரம் ஒன்றை உச்ச நீதிமன்றம் பயன்படுத்தி உள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த 2014ல் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் தூக்கு தண்டனை முன்னதாக ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த மே மாதம் பேரறிவாளன் உச்ச நீதிமன்றம் மூலம் விடுதலை செய்யப்பட்டார்.
முன்னதாக பேரறிவாளன் கருணை மனு அப்போது நிலுவையில் இருந்தது. நீண்ட காலம் கருணை மனு நிலுவையில் இருப்பது அநீதிக்கு சமமானது.

அநீதி
இதை சுட்டிக்காட்டி 2014ல் இவரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில்தான் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பேரறிவாளன் 2016ல் மனுதாக்கல் செய்து, அதன்பின் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தார். இந்த நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ், போபண்ணா மற்றும் பிஆர் கவாய் ஆகியோர் பேரறிவாளனுக்கு இந்த வழக்கில் பெயில் வழங்கினார். இதையடுத்து இன்று பேரறிவாளனை விடுதலை செய்து தீர்ப்பளித்தனர்.

எடுத்துக்காட்டு
இதே வழக்கை எடுத்துக்காட்டி இந்த வழக்கில் தொடர்புடைய இன்னும் 6 பேரை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நளினி அவரது கணவர் முருகன், ராபர்ட் பயஸ், சாந்தன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. இதற்காக முக்கியமான அதிகாரம் ஒன்றை உச்ச நீதிமன்றம் பயன்படுத்தி உள்ளது. முன்னதாக பேரறிவாளன் வழக்கில் தீர்ப்பு வழங்கும் போது உச்ச நீதிமன்றம் சில முக்கியமான விஷயங்களை தெரிவித்தது.

விடுதலை
அதில், பேரறிவாளனை விடுதலை செய்ய அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது. ஆனால் இதில் ஆளுநர் முடிவு எடுக்கவில்லை. விடுதலை பரிந்துரை மீது ஆளுநர் முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தியது தவறு. அமைச்சரவை எடுத்த முடிவை அவர் ஏற்று இருக்க வேண்டும். பேரறிவாளனை விடுதலை செய்ய உரிய பரிசீலனைக்குப் பின் மாநில அரசு முடிவு. ஆனால் ஆளுநர் இதை ஏற்காமல் இருந்தார். 33 மாதங்கள் இதில் முடிவு எடுக்காமல் இருந்தது தவறு.

அரசியல் சாசனம்
அரசியல் சாசனத்தின் 161-வது மாநில அரசுக்கான சிறப்புரிமையை கொண்டது; ஆளுநர் இதற்கு கட்டுப்பட்டவர்; மீறி நடப்பது தவறு. அவர் காலதாமதம் செய்தது தவறு. இதை அடிப்படையாக வைத்தும், சிறையில் 6 பேரின் நன்னடத்தையை அடிப்படையை வைத்தும் இவர்களை விடுதலை செய்கிறோம் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. இதே தீர்ப்பு மற்ற 6 பேருக்கும் பொருந்தும். ஏனென்றால் அமைச்சரவை தீர்மானத்தில் மற்ற 6 பேரையும் விடுதலை செய்ய பரிந்துரை செய்யப்பட்டது. எனவே அதை அடிப்படையாக வைத்து மற்ற 6 பேரையும் விடுதலை செய்வதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. நளினி உள்ளிட்டோர் தொடுத்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கினர்.

கண்டிப்பு
இதில் உச்ச நீதிமன்றம் தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, வழக்கில் 142-வது பிரிவைச் செயல்படுத்தி, விடுதலை செய்துள்ளது. 142 பிரிவு என்பது உச்ச நீதிமன்றம் தனக்கு முன்பில் இருக்கும் வழக்கில் முழு நீதியை வழங்க முடியும். ஒரு விவகாரத்தில் முழு நீதி கிடைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கருதினால், இந்த பிரிவை பயன்படுத்தி அதில் தீர்ப்பு வழங்க முடியும். ஒரு உதாரணமாக ஒரு நபருக்கு நீதி கிடைக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் கருதினால் இந்த சட்ட பிரிவை பயன்படுத்தி தீர்ப்பு வழங்கி நீதி கொடுக்க முடியும். அதைத்தான் உச்ச நீதிமன்றம் தற்போது பயன்படுத்தி தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த விடுதலை தீர்மானத்தை ஆளுநர் இத்தனை நாட்கள் கிடப்பில் போட்டு இருந்தார். அதானால் நீதி கிடைக்கவில்லை என்று கருதி உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது.
-
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications