ராஜீவ் கொலை வழக்கு:பேரறிவாளன் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுக்காததை ஏற்க முடியாது- உச்சநீதிமன்றம்
டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பான தமிழக அமைச்சரவை தீர்மானத்தின் மீது தமிழக ஆளுநர் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்துவது ஏற்புடையது அல்ல; இந்த விவகாரத்தில் ஆளுநர் உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 பேர் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். ராஜீவ் காந்தி படுகொலையில் சர்வதேச சதித் தொடர்பு குறித்து சிபிஐயின் பல்நோக்கு கண்காணிப்புக் குழு (Multi Disciplinary Monitoring Agency) இன்னமும் விசாரணை நடத்தி வருகிறது.
இந்த விசாரணை முடியும் வரை தங்களது ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று 2016-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சிபிஐ-ன் பல்நோக்கு கண்காணிப்புக் குழு, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த அறிக்கைகள் மீது பலமுறை அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.

தமிழக அமைச்சரவை தீர்மானமும் ஆளுநரும்
மேலும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய 2018-ம் ஆண்டு செப்டம்பர் 9-ந் தேதி தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்திருந்தது. இத்தீர்மானத்தின் மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் இருந்தார். பேரறிவாளன் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தின் மீதான ஆளுநரின் நிலைப்பாடு குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தது. மேலும் ஆளுநர் உரிய காலத்தில் முடிவெடுக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது.

ஆளுநரின் நிலைப்பாடு என்ன?
ஆனால் சிபிஐ-ன் பல்நோக்கு கண்காணிப்பு குழுவின் விசாரணை முடிவுக்காக ஆளுநர் காத்திருப்பதாக அந்த விசாரணையின் போது தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும் மத்திய அரசு சார்பில், 7 பேர் விடுதலை தொடர்பான தமிழக அமைச்சரவை தீர்மான விவரங்களை ஆளுநர் ஆராய்ந்து கொண்டிருப்பதாகவும் உரிய பரிந்துரைகளை ஜனாதிபதிக்கு அவர் அனுப்பி வைப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஹைகோர்ட்டில் நளினி வழக்கு
இதனிடையே தம்மை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி ராஜீவ் கொலை வழக்கில் மற்றொரு ஆயுள் தண்டனை கைதியான நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது கடந்த வாரம் விசாரணை நடைபெற்றது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், இதே வழக்கில் பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது டிசம்பர் 7-ந் தேதி விசாரணை நடைபெற உள்ளது என குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து கூடுதல் பதில் மனுவைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை?
இதனிடையே உச்சநீதிமன்றத்தில், பேரறிவாளன் தாக்கல் செய்த வழக்கு விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின் போது, பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்யும் தமிழக அமைச்சரவைத் தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்துவது ஏற்புடையது அல்ல; இந்த விவகாரத்தில் ஆளுநர் உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கை மத்திய அரசு கேட்டுக் கொண்டதால் ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைப்பதாகவும் மத்திய அரசு தரப்பில் இனியும் வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என கேட்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications