டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எல்லையில் பதற்றம்… உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை

Google Oneindia Tamil News

Recommended Video

    காஷ்மீர் எல்லையில் பாக். தொடர்ந்து தாக்குதல்.. 5 இந்திய வீரர்கள் படுகாயம்.. Surgical strike2

    டெல்லி: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    எல்லை தாண்டிய இந்திய விமானப் படையின் தாக்குதலுக்கு பிறகு மூத்த அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    Rajnath Singh Counseling With National Security Advisor Ajit Doval.

    புல்வாமா தாக்குதலுக்கு பழி தீர்க்கும் விதமாக இந்திய விமானப்படை நேற்று அதிகாலை தீவிரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் 200க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

    எல்லை தாண்டி இந்திய விமானப் படைகள் தாக்குதல் நடத்தியதால் பாகிஸ்தான் எல்லையில் படைகளை குவித்து வருகிறது. அதேநேரம், எதனையும் சமாளிக்க இந்தியாவும் எல்லையில் படைகளை குவித்து வருகிறது.

    இதற்கிடையே, நேற்று இரவு முதல் பாகிஸ்தான் படையினர் உரி பகுதியில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இந்திய படையினரும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் முப்படைகளின் தளபதிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இதற்கிடையே, எந்த விதத்திலும் சகித்துக்கொள்ள முடியாது என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். இந்திய விமானப்படை, பாகிஸ்தானின் ராணுவ இலக்குகள் எதையும் தாக்கவில்லை என்றும் சுஷ்மா சுவராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

    English summary
    Home Minister Rajnath Singh has been consulted with National Security Adviser Ajit Doval.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X