காஷ்மீர் எல்லையில் 2020ல் பாகிஸ்தான் 5,133 முறை அத்துமீறியதுங்க மாநிலங்களவையில் ராஜ்நாத் சிங் தகவல்!
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆண்டு பாகிஸ்தானால் 5,133 அத்துமீறல் சம்பவம் நடந்ததாக மாநிலங்களவையில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இந்த அத்துமீறல் சம்பவத்தில் 46 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர் என்றும் ராஜ்நாத் சிங் கூறினார்.
காஷ்மீர் எல்லைக்குள் பாகிஸ்தான் பயங்கரவாதிகளை அனுப்புகிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

5,133 அத்துமீறல் சம்பவம்
ராஜ்யசபாவில் ஒரு கேள்விக்கு பதிலளித்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது:- ஜம்மு காஷ்மீரில் சர்வதேச கட்டுப்பாட்டு எல்லை பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தம் மீறி பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு பாகிஸ்தானால் 5,133 அத்துமீறல் சம்பவம் நடந்துள்ளது. இதில் 46 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் கடைபிடிக்க வேண்டும்
எல்லையில் அத்துமீறுபவர்களுக்கு பாதுகாப்பு படையினர் பொருத்தமான பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த அத்துமீறல் தொடர்பாக பாகிஸ்தானிய ராணுவ அதிகாரிகளுடன், இந்திய ராணுவ அதிகாரிகள் விவாதித்து வருகின்றனர். கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் சர்வதேச எல்லையின் புனிதத்தன்மையை பாகிஸ்தான் கடைபிடிக்க வேண்டும்.

பயங்கரவாதிகளை அனுப்புகிறது
கொரோனா வைரஸ் தொற்று இருந்தபோதிலும் பாகிஸ்தான் காஷ்மீர் கட்டுப்பாட்டுக் கோட்டில் அத்துமீறிய தாக்குதல் நடத்தி வருகிறது. காஷ்மீருக்குள் பயங்கரவாதிகளை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது என்று ராஜ்நாத் சிங் கூறினார். மேலும் உள்நாட்டு நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதா? என்ற ஒரு கேள்வி எழுப்பப்பட்டது.

ராணுவ ரகசியம்
அதற்கு பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில், ராணுவ தகவல் இயற்கையில் உணர்திறன் வாய்ந்தது. அதன் வெளிப்பாடு தேசிய பாதுகாப்பின் நலனுக்கு விரோதமானது என்பதால் அதை தெரிவிக்க இயலாது. சமீபத்தில் நடைபெற்ற மலபார் கடற்படைப் பயிற்சி, பங்கேற்கும் நாடுகளுக்கு இடையில் ஒத்துழைப்பு, இயங்கக்கூடிய தன்மை மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்தியது என்று கூறினார்.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications