ராஜ்யசபா தேர்தல்: 11 மாநிலங்களை சேர்ந்த 41 பேர் போட்டியின்றி தேர்வு!
டெல்லி: ராஜ்யசபா தேர்தலில் 11 மாநிலங்களை சேர்ந்த 41 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர்.
நாடு முழுவதும் 15 மாநிலங்களிலிருந்து இருந்து காலியாகும் 57 ராஜ்யசபா எம்பி பதவிகளுக்கான தேர்தல் வரும் 10 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் வேட்புமனுக்களை திரும்ப பெற நேற்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் உத்தரப்பிரதேசத்திலிருந்து 11 பேரும் தமிழகத்தை சேர்ந்த 6 பேரும் பீகாரில் இருந்து 5 பேரும், ஆந்திராவிலிருந்து 4 பேரும், மத்திய பிரதேசம், ஒடிஸா ஆகிய மாநிலங்களிலிருந்து தலா 3 பேரும், சத்தீஸ்கர், பஞ்சாப், தெலுங்கானா, ஜார்க்கண்ட் மாநிலங்களிலிருந்து தலா 2 பேரும் உத்தரகண்ட் மாநிலத்திலிருந்து ஒருவரும் போட்டியிடுவதாக வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

இவர்களை எதிர்த்து வேறு யாரும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யாததால் இவர்கள் 11 பேரும் போட்டியின்றி வென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ப சிதம்பரம், ராஜீவ் சுக்லா, பாஜகவை சேர்ந்த சுமித்ரா வால்மீகி, கவிதா படிதர், முன்னாள் காங்கிரஸ் தலைவர் கபில் சிபல், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் மிசா பாரதி, ஜெயந்த் சவுத்ரி உள்ளிட்டோரும் ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
ஹரியானா, ராஜஸ்தான், கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய 4 மாவட்டங்களில் எந்த வேட்பாளரும் தனது வேட்புமனுவை திரும்ப பெறாததால் அந்த மாநிலங்களில் வேட்புமனு தாக்கல் செய்தவர்களுக்கு ஜூன் 10 ஆம் தேதி தேர்வு நடத்தப்படும்.
ராஜஸ்தானில் 4 இடங்கள், ஹரியானாவில் இரு இடங்களுக்கான ராஜ்யசபா தேர்தல் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த இரு மாநிலங்களிலும் அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உதய்பூரிலும் ராய்ப்பூரிலும் உள்ள ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.
அது போல் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் போட்டியை தவிர்ப்பதற்காக தங்கள் கட்சி வேட்பாளரை வேட்புமனுவை வாபஸ் பெற நேற்று கட்சிகள் அழுத்தம் கொடுத்து வந்தன. ஆனாலும் யாரும் வாபஸ் பெறவில்லை. தற்போதைய நிலவரப்படி ராஜ்யசபாவில் பாஜகவின் பலம் 93 ஆகவும் , காங்கிரஸ் கட்சிக்கு 32 ஆகவும் திமுகவுக்கு 11 ஆகவும் அதிமுகவுக்கு 4 ஆகவும் அதிகரித்துள்ளது.
-
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications