டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எதிர்க்கட்சிகள் அமளி: பிற்பகல் வரை ராஜ்யசபா ஒத்திவைப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 எம்பிக்கள் மீதான நடவடிக்கையை திரும்ப பெறக் கோரி ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் அமளியால் அவை பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் அமளியில் ஈடுபட்டதற்காக இந்த குளிர் கால கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 எம்பிக்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.

Rajya Sabha adjourned till noon

இதையடுத்து அவையில் கூச்சல் குழப்பம் எழுந்தது. 12 எம்பிக்களும் மன்னிப்பு கேட்டால் மட்டுமே சஸ்பெண்ட் நடவடிக்கை திரும்ப பெறப்படும் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் இன்று 7-ஆவது நாளாக இரு அவைகளும் காலை 11 மணிக்கு கூடின. அப்போது மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களிடம் கூறுகையில் 12 எம்பிக்கள் இடைநீக்கம் என்பது விதிகளுக்கு புறம்பானது. ஜனநாயகத்திற்கு விரோதமானது என்றார்.

பரபரப்பான நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்.. இன்று தாக்கலாகும் முக்கிய மசோதாக்கள் பரபரப்பான நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்.. இன்று தாக்கலாகும் முக்கிய மசோதாக்கள்

இதையடுத்து மாநிலங்களவையிலும் 12 எம்பிக்கள் மீதான இடைநீக்கத்தை ரத்து செய்ய கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து ராஜ்யசபா பிற்பகல் வரை ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து ராஜ்யசபா மூன்றாவது நாளாக ஒத்திவைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

English summary
Rajya Sabha adjourned till noon after uproar over suspension of 12 Rajya sabha MPs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X