2 மாநிலங்கள்.. போட்டியே இன்றி தேர்வான ஐந்து பேர்.. ராஜ்யசபா செல்லும் புதிய எம்பிக்கள்!
டெல்லி: இன்று 19 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கு ராஜ்யசபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஏற்கனவே 5 பேர் போட்டியின்றி இந்த தேர்தலில் வெற்றிபெற்று இருக்கிறார்கள்.
இன்று ராஜ்யசபா தேர்தல் நடக்க உள்ளது. மொத்தம் 8 மாநிலங்களில் உள்ள இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது. இதில் 19 ராஜ்யசபா இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது.

அதிகமாக ஆந்திர பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் 4 ராஜ்யசபா இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது. அதேபோல் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 3 ராஜ்யசபா இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது.
கணக்குப்படி மொத்தம் 24 இடங்கள் காலியாக உள்ளது. ஆனால் இந்த இடங்கள் அனைத்திற்கும் தேர்தல் நடக்க வில்லை. இதில் 5 எம்பிக்கள் ஏற்கனவே போட்டியின்றி தேர்வானார்கள். இதனால் மீதம் இருக்கும் 19 இடங்களுக்கு தேர்தல் நடக்க உள்ளது.
இந்த 5 எம்பிக்களின் வெற்றிக்குறித்து இன்று மாலை தேர்தல் முடிவுகள் வரும் போது அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும். இந்த தேர்தலில் கர்நாடகாவில் 4 பேர் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர்.
மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் தேசிய தலைவர் மற்றும் முன்னாள் பிரதமர் தேவ கவுடா கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபாவிற்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் போட்டியிட்டார். இரண்டாவது முறையாக இவர் ராஜ்யசபா எம்பியாகி உள்ளார்.
அதேபோல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே போட்டியின்றி இந்த தேர்தலில் வெற்றிபெற்று இருக்கிறார். பாஜகவைச் சேர்ந்த அசோக் கஸ்தி மற்றும் இரானா கடாடி ஆகியோரும் போட்டியின்றி ராஜ்யசபாவிற்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
Recommended Video
அருணாசலப் பிரதேசத்தில் பாஜகவின் நாபம் ரெபியாவும் போட்டியின்றி தேர்வாகி உள்ளார். இதனால் 19 எம்.பி. இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications