"அந்த" 75 சீட்! தமிழகத்திலும் நடக்க போகும் மேஜர் மாற்றம்! தேசிய பாலிடிக்ஸ் கூட இதை நம்பிதான் இருக்கு
டெல்லி: 2026ம் ஆண்டு பல்வேறு மாநிலங்களிலும் சட்டசபைத் தேர்தல் நடக்கிறது. சட்டசபைத் தேர்தல்களோடு பல்வேறு மாநிலங்களும் ராஜ்யசபா தேர்தலும் நடக்கிறது. பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மொத்தம் 75 ராஜ்யசபா இடங்கள் காலியாகிறது. இந்த இடங்கள் எந்தக் கட்சிக்குச் செல்கிறது என்பதும் கூட முக்கியமானதாகவே பார்க்கப்படுகிறது.
இன்னும் சில நாட்களில் 2026 பிறக்கப் போகிறது. அடுத்தாண்டு இந்திய அரசியல் களம் மிகவும் முக்கியமானதாக மாறுகிறது. குறிப்பாக அடுத்தாண்டு தொடக்கத்திலேயே தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உட்பட 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல்கள் நடக்கிறது. இந்தச் சட்டசபைத் தேர்தல்கள் முடிவுகள் ரொம்பவே முக்கியமானதாக இருக்கிறோம்.

75 ராஜ்யசபா சீட்கள்
சட்டசபைத் தேர்தலுடன் 75 ராஜ்யசபா இடங்களுக்கும் தேர்தல் நடக்கிறது. இந்த சீட்கள் நாடாளுமன்ற மேலவை பலத்தைத் தீர்மானிக்கும். இந்த 75 சீட்கள் ஏப்ரல், ஜூன், நவம்பர் மாதங்களில் காலியாகும். இது ஆளும் NDA கூட்டணி மற்றும் எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி இடையே உள்ள அதிகாரச் சமநிலையைக் கணிசமாக மாற்றியமைக்கும்.
எந்த மாநிலங்கள்
பீகார், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், ஆந்திரா, தெலங்கானா, மேற்கு வங்கம், தமிழ்நாடு மாநிலங்களில் ராஜ்யசபா இடங்கள் காலியாக உள்ளன. இதில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் பிரதமர் தேவேகவுடா, திக்விஜய சிங், சரத் பவார், மத்திய அமைச்சர்களான ஹர்தீப் சிங் பூரி, பி.எல். வர்மா, ரவ்னீத் சிங் பிட்டு, ஜார்ஜ் குரியன் போன்ற மூத்த தலைவர்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. இவர்கள் யாரெல்லாம் நாடாளுமன்றத்திற்குத் திரும்புவார்கள் என்பது பெரிய கேள்வியாகவே உள்ளது.
இப்போது ராஜ்யசபாவில் என்டிஏ பலம் 129ஆகவும் எதிர்க்கட்சிகள் பலம் 78ஆகவும் உள்ளன. அடுத்தாண்டு ராஜ்யசபா பலத்தில் ஏற்படும் மாற்றம் தேசிய அரசியலைக் கணிசமாக மாற்றி அமைக்கும்.
பீகார், மகாராஷ்டிரா
மாநிலம் வாரியாக பார்க்கும்போது, பீகாரில் 5 ராஜ்யசபா இடங்கள் காலியாகும். இப்போது இதில் 3 எம்பிக்கள் என்டிஏ கூட்டணியில் இருந்தும் இரு எம்பிக்கள் இந்தியா கூட்டணியில் இருந்தும் உள்ளனர். பீகார் தேர்தலில் என்டிஏ பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற நிலையில், 4 ராஜ்யசபா எம்பிக்கள் சீட் என்டிஏ கூட்டணி வசம் போகும். ஒரு இடம் மட்டுமே எதிர்க்கட்சிகளுக்குக் கிடைக்கும்.
மகாராஷ்டிராவில் ஏழு ராஜ்யசபா இடங்களுக்கு ஏப்ரலில் தேர்தல் நடைபெறும். அதில் பாஜக கூட்டணிக்கே பெரும்பாலான இடங்கள் கிடைக்கும். எதிர்க்கட்சி கூட்டணி குறைந்த இடங்களே கிடைக்கும். கர்நாடகாவில் 4 ராஜ்யசபா இடங்களுக்குத் தேர்தல் நடக்கும் நிலையில், எல்லாம் சரியாக நடந்தால் காங்கிரஸ் கட்சிக்கு 3 இடங்கள் வரை கூட கிடைக்கலாம். பாஜகவுக்கு ஒரு இடம் கிடைக்கும். உத்தரப் பிரதேசத்தில் 10 ராஜ்யசபா இடங்களுக்குத் தேர்தல் நடக்கிறது.. இப்போது 8 சீட்கள் பாஜக வசமும், சமாஜ்வாதி மற்றும் பிஎஸ்பி வசம் தலா ஒரு இடமும் இருக்கிறது. இப்போது அது பாஜகவுக்கு 8 சீட் மற்றும் சமாஜ்வாதிக்கு 2 சீட் என மாறும்.
தமிழ்நாடு
இது தவிர மேற்கு வங்கத்தில் 5 சீட்கள், தமிழகத்தில் 6 சீட்கள் காலியாகிறது. தம்பிதுரை, திருச்சி சிவா உள்ளிட்டோரின் பதவிக்காலம் முடிகிறது. இந்தாண்டு மார்ச் மாதம் தேர்தல் நடக்கும் நிலையில், அதை பொறுத்தே தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் இருந்து யார் செல்கிறார்கள் என்பது தெரிய வரும். இது தவிர அசாம், அருணாச்சல பிரதேசம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேச மாநிலங்களிலும் எம்பி சீட் காலியாகிறது.
இந்த 75 இடங்களில் யார் வருகிறார்கள் என்பது தேசிய அரசியலில் முக்கியமானதாக இருக்கும். பல மசோதாக்கள் ராஜ்யசபாவிலும் தாக்கல் செய்யப்படும் நிலையில், அங்கு எந்த கட்சியின் பலம் என்னவாக இருக்கிறது என்பதும் முக்கியம். எனவே, அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தலுக்கு இணையாக இந்த ராஜ்யசபா தேர்தல் முடிவுகளும் முக்கியத்துவம் பெறும்!












Click it and Unblock the Notifications