மமதா பானர்ஜி கோட்டையில் இருந்து முதல் ராஜ்யசபா எம்பி.. கணக்கை தொடங்கும் பாஜக!
டெல்லி: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரைன் உள்ளிட்ட 11 பேர் போட்டியின்றி ராஜ்யசபா எம்.பி.க்களாக தேர்வு செய்யப்படுகின்றனர்.
கோவா, குஜராத் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் 11 ராஜ்யசபா எம்.பிக்கள் பதவி காலம் முடிவடைந்தது. இதனையடுத்து 11 ராஜ்யசபா எம்பி இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கு போட்டிகள் இருந்தால் ஜூலை 24-ல் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
போட்டியின்றி தேர்வு: இத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸின் 6 பேரும் பாஜகவின் 5 பேரும் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். இவர்களில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், குஜராத் மாநிலத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார். ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 13-ந் தேதி முடிவடைந்தது. இந்த 11 பேரை எதிர்த்து யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை. இதனால் 11 பேரும் போட்டியின்றி தேர்வாவது உறுதியானது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகிறது.

மே. வங்கம்: மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் 7 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் 6 இடங்களுக்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸும் 1 இடத்துக்கு பாஜகவும் வேட்புமனுத் தாக்கல் செய்தன. திரிணாமுல் காங்கிரஸின் டெரிக் ஓ பிரைன் உட்பட 6 பேரும் போட்டியின்றி தேர்வாகின்றனர். அதேபோல பாஜகவின் அனந்த் ராய் மகாராஜாவும் போட்டியின்றி ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வாகிறார். மமதா பானர்ஜியின் கோட்டையான மேற்கு வங்க மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான பாஜக தமது முதல் ராஜ்யசபா எம்.பி. பதவியை இதன் மூலம் பெற்று புதிய சரித்திரம் படைத்திருக்கிறது.
கோவா: கோவா மாநிலத்தில் பாஜக மாநில தலைவர் சதானந்த் ஷெட் தனவாதே ராஜ்யசபா எம்.பி.யாகிறார்.
குஜராத்: குஜராத் மாநிலத்தில் மொத்தம் 3 ராஜ்யசபா எம்பி பதவி இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், குஜராத்தில் இருந்து 2-வது முறையாக ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வாகிறார்.
ராஜ்யசபா தற்போதைய பலம்: ராஜ்யசபாவில் மொத்த எம்.பிக்கள் எண்ணிக்கை 245. 7 இடங்கள் காலியாக உள்ளன. தற்போதைய எம்.பிக்கள் எண்ணிக்கை 238. பாஜகவுக்கு 92, காங்கிரஸ் கட்சிக்கு 31, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 12, திமுக, ஆம் ஆத்மி கட்சிகளுக்கு தலா 10 எம்.பிக்கள் ராஜ்யசபாவில் உள்ளனர். பிஜூ ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா 9 ராஜ்யசபா எம்.பி.க்கள் சபையில் உள்ளனர்.
ராஜ்யசபா எண்ணிக்கை மாற்றம்: தற்போதைய தேர்தலில் ராஜ்யசபாவில் பாஜகவுக்கு 1 இடம் கூடுதலாக கிடைக்கும். இதன் மூலம் ராஜ்யசபாவில் பாஜகவின் பலம் 93 ஆக அதிகரிக்கும். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மொத்த ராஜ்யசபா எம்.பி.க்கள் எண்ணிக்கை 105 ஆகவும் உயரும். காங்கிரஸ் எண்ணிக்கை 30 ஆகவும் குறையும்.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
மம்தாவுக்கு மரண அடி.. உடையும் திரிணாமுல் காங்கிரஸ்? தீதீ-ஐ விட்டு செல்லும் 59 எம்எல்ஏக்கள்












Click it and Unblock the Notifications