சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்த இளையராஜா.. நாளை துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் நிலையில் மீட்டிங்
டெல்லி: டெல்லியில் என்.டி.ஏ கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை ராஜ்யசபா எம்.பி இளையராஜா சந்தித்துள்ளார். நியமன எம்.பியாக இருக்கும் இசையமைப்பாளர் இளையராஜா, நாளை நடைபெறும் துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் 17-வது துணை குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது. துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர், திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, 17-வது துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.

ஆளும் பாஜக கூட்டணி சார்பாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த மகாராஷ்டிரா ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணி சார்பாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார்.
துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் மட்டுமே வாக்களிக்கத் தகுதியானவர்கள். நாடாளுமன்ற வளாகத்தில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறும். வாக்குப் பதிவுகள் முடிவடைந்த உடன், வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
நாடாளுமன்றத்தில் மக்களவையில் ஒரு எம்.பி இடம் காலியாக உள்ளதால் 542 பேர் உறுப்பினர்கள். மாநிலங்களவையில் 5 எம்.பிக்கள் காலியாக உள்ளதால் 228 எம்.பிக்கள் உள்ளனர். நியமன எம்.பிக்கள் 12 பேர். மொத்தம் 782 பேர் வாக்காளர்கள். இதில் 392 பேரின் வாக்குகளைப் பெறுபவர் வெற்றி பெறுவார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மொத்தம் 422 எம்.பிக்கள் உள்ளனர்.
தற்போதைய நிலையில் ஆளும் பாஜக கூட்டணியின் சிபி ராதாகிருஷ்ணன், துணை ஜனாதிபதி தேர்தலில் வெல்லும் வாய்ப்புகள் உள்ளன. இந்நிலையில் இந்த தேர்தலை புறக்கணிக்க போவதாக ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம் கட்சி அறிவித்துள்ளது. தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலானபாரதீய ராஷ்ட்ரீய சமிதி கட்சியும் துணை ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் டெல்லியில் என்.டி.ஏ கூட்டணியின் குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை இளையராஜா சந்தித்துள்ளார். நியமன எம்.பியாக இருக்கும் இளையராஜா, நாளை நடைபெறும் துணை ஜனாதிபதி தேர்தலில் சிபி ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக வாக்களிப்பார் எனத் தெரிகிறது.
-
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications