உபி தேர்தல்.. பாஜகவை படுதோல்வி அடைய செய்வதே எங்கள் ஒரே இலக்கு.. ராகேஷ் டிக்கைட் திட்டவட்டம்
டெல்லி: உத்தரப் பிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், பாஜகவைத் தோற்கடிக்க விவசாயச் சங்கங்கள் நடவடிக்கை எடுக்கும் என்றும் தேர்தல் சமயத்தில் பிரசாரம் செய்ய முடியாத சூழலை ஏற்படுத்துவோம் என்றும் விவசாயச் சங்கத் தலைவர் ராகேஷ் டிக்கைட் எச்சரித்துள்ளார்.
மத்திய அரசு கடந்தாண்டு கொண்டு வந்த விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கடந்தாண்டு நவம்பர் மாதம் தொடங்கிய விவசாயிகள் போராட்டம் ஓர் ஆண்டாகத் தொடர்ந்தது.
டிசம்பர் மாதம் நிலவிய கடும் குளிர், மார்ச், ஏப்ரல் சமயத்தில் நிலவிய கொளுத்தும் வெயிலுக்கு மத்தியிலும் போராட்டத்தைத் தொடர்ந்தனர். பாலிவுட் பிரபலங்கள் பலரும் இந்த விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.

பிரதமர் மோடி அறிவிப்பு
பல மாதங்களாக விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்த போதிலும், மத்திய அமைச்சர்களும் பலரும் விவசாய தலைவர்களும் வேளாண் சட்டம் கண்டிப்பாகத் திரும்பப் பெறப்படமாட்டாது எனத் தொடர்ந்து பேசி வந்தனர். இந்தச் சூழலில் குரு நானக் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது நாட்டு மக்களிடையே மன்னிப்பு கேட்டுக்கொண்ட பிரதமர் மோடி, மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதாக அறிவித்தார்.

விவசாயிகள் கோரிக்கை
இருப்பினும், நாடாளுமன்றத்தில் சட்டப்படி விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்றும் விவசாயிகள் அறிவித்துள்ளனர். மேலும், குறைந்தபட்ச ஆதரவு விலை, மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மீது நடவடிக்கை உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தியுள்ளனர்.

குறைந்தபட்ச ஆதரவு விலை
இந்நிலையில் ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விவசாயச் சங்கத் தலைவர் ராகேஷ் டிக்கைட், "குறைந்தபட்ச ஆதரவு விலை எங்களுக்கு உதவியாக இருக்கும். குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது எப்போதும் எங்கள் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது. மத்திய அரசுடன் நடைபெற்ற 11 சுற்று பேச்சுவார்த்தையின் போதும் MSP குறித்து விவாதித்தோம். நாங்கள் அதில் பின்வாங்கப் போவதில்லை. சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தத் தேவையான பேச்சுவார்த்தைகளை அரசு தொடங்க வேண்டும்.

பாஜகவை தோற்கடிப்போம்
தேர்தல் நடத்தை விதிகள் தொடங்கும் முன்னர் எங்கள் கோரிக்கையை மத்திய அரசும், பிரதமர் மோடியும் நிறைவேற்ற வேண்டும். இப்போதுள்ள சூழலில் டெல்லி போராட்ட களத்தை விட்டு வெளியேறும் முடிவில் நாங்கள் இல்லை. உபி மக்களிடம் பாஜகவை தோற்கடிப்போம் என்ற கோஷத்தை எடுத்துச் செல்வோம். பாஜகவை தோற்கடிப்பதே விவசாயச் சங்கங்களின் ஒரே இலக்கு.

பிரசாரம் செய்ய முடியாத நிலை
கிராமங்களில் அவர்களை மக்கள் புறக்கணிப்பதை நாங்கள் உறுதி செய்வோம். பிரசாரம் செய்ய முடியாத நிலையைக் கண்டிப்பாக ஏற்படுத்துவோம், ஏற்கனவே மேற்கு உத்தரப் பிரதேசத்தில் இந்த நிலை தான் உள்ளது. அதேபோல பாஜக எங்கெல்லாம் தோற்கும் நிலையில் உள்ளதோ, அங்கெல்லாம் ஓவைசி வருகிறார். விவசாயிகள் போராட்டம் இப்போது முடியாது. வரும் நவ. 29ஆம் தேதி டெல்லியை நோக்கி ஒரு டிராக்டர் பேரணி நடத்தவுள்ளோம். அதேபோல, நவ. 30ஆம் தேதி மற்றொரு போராட்டம் நடத்துவோம்" என்று அவர் தெரிவித்தார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications