தேசிய திருவிழாவாக மாறிய ராமர் கோவில் திறப்பு! மத்திய அரசு அலுவலகங்களுக்கு 22ம் தேதி அரைநாள் லீவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா நடைபெறும் ஜனவரி 22-ந் தேதியன்று அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் அரைநாள் விடுமுறை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு பல்வேறு மாநிலங்கள் அரசு விடுமுறை நாளாக அறிவித்துள்ள நிலையில் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதியதாக கட்டப்பட்ட ராமர் கோவில் வரும் 22-ந் தேதி திறக்கப்படுகிறது. அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நிகழ்வுகள் முழு வீச்சில் நடைபெறுகின்றன. ராமர் கோவில் கருவறையில் இன்று ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அயோத்தி ராமர் கோவில் நிகழ்வுகளுக்கு பிரதமர் மோடி தலைமை வகிக்கிறார். இதற்கு சங்கராச்சாரியார்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் பாஜக இதை அரசியல் நிகழ்ச்சியாக்குவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி புறக்கணித்துள்ளன.

Ram Mandir inauguration: Centre declares half-day holiday on Jan 22

இதனிடையே அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா நாளன்று பல்வேறு மாநிலங்கள் விடுமுறை தினமாக அறிவித்துள்ளன. உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஏற்கனவே ஜனவரி 22 விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநில அரசும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவித்துள்ளது. மேலும் அயோத்தி செல்வதற்கான சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. கோவா மாநிலத்தில் ஜனவரி 22-ந் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஹரியானாவிலும் அன்றைய தினம் பள்ளிகள் மூடப்படும் என அறிவித்துள்ளது அம்மாநில அரசு.

மேலும் அயோத்திக்கு ரயில்வே நிர்வாகம் 200க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களையும் இயக்குகிறது. இதனைத் தொடர்ந்து தற்போது மத்திய அரசு, ஜனவரி 22-ந் தேதி அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் அரைநாள் விடுமுறை அறிவித்துள்ளது. அன்றைய தினம் மத்திய அரசின் அனைத்து துறைசார் நிறுவன அலுவலகங்கள், தொழில் மற்றும் கல்வி நிறுவனங்கள் அனைத்துக்கும் நாடு முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+