அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா.. எத்தனை மாநிலங்கள் ஜன. 22-ல் விடுமுறை அறிவித்துள்ளன தெரியுமா?
டெல்லி: அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெறும் ஜனவரி 22-ந் தேதி மத்திய அரசு அரை நாள் விடுமுறையை அறிவித்துள்ளது. அதேபோல திரிபுரா முதல் ஒடிஷா வரை பல மாநிலங்களும் ஜனவரி 22-ந் தேதியை விடுமுறை நாளாக அறிவித்துள்ளன.
அயோத்தியில் ராமர் கோவில் வரும் 22-ந் தேதி திறக்கப்படுகிறது. ராமர் கோவில் திறப்பு விழா நாடு முழுவதும் பெரும் உற்சாகமான திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அயோத்தியில் ஒவ்வொரு நாளும் பல்வேறு ஆன்மீக நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதனிடையே அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு ஜனவரி 22-ந் தேதியன்று மத்திய அரசு அரை நாள் விடுமுறை அறிவித்துள்ளது. அன்றைய தினம் மத்திய அரசின் அனைத்து நிறுவனங்களும் பிற்பகல் 2.30 மணி வரை மட்டும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல மாநில அரசுகளும் ஜனவரி 22-ந் தேதி விடுமுறை அறிவித்துள்ளன.
திரிபுரா: திரிபுரா மாநிலத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களும் ஜனவரி 22-ந் தேதி பிற்பகல் 2.30 மணிவரை மட்டும் இயங்கும். அதாவது அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலத்திலும் ஜனவரி 22-ல் அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு அலுவலகங்களும் பகல் 2.30 மணி வரை மட்டும் இயங்கும்.
உ.பி: உத்தரப்பிரதேசத்தில் ஜனவரி 22-ந் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள், மதுபான கடைகள் அனைத்தும் அன்றைய தினம் மூடப்படும்.
ம.பி: மத்திய பிரதேச மாநிலத்திலும் பள்ளிகள் அனைத்துக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வர்த்தக நிறுவனங்கள், மதுபான கடைகளும் அன்றைய தினம் மூடப்படும்.
கோவா: கோவா மாநிலத்தில் ஜனவரி 22-ந் தேதி முழுநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை அன்றைய தினம் மூடப்பட்டிருக்கும்
ஹரியானா: ஹரியானாவிலும் கல்வி நிறுவனங்கள், மதுபான கடைகள் உள்ளிட்டவை எதுவும் ஜனவரி 22-ந் தேதி இயங்காது என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஒடிஷா: பாஜக அல்லாத பிஜூ ஜனதா தளம் ஆளும் ஒடிஷா மாநில அரசும் ஜனவரி 22-ந் தேதி விடுமுறை அறிவித்துள்ளது. அதே நேரத்தில் மாஜிஸ்திரே, வருவாய் நீதிமன்றங்கள் அரை நாள் மட்டும் இயங்கும்.
அஸ்ஸாம், ஹரியானா: அஸ்ஸாம் மாநில அரசும் அரை நாள் விடுமுறை அறிவித்துள்ளது. அனைது அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் ஜனவரி 22-ந் தேதியன்று பகல் 2.30 மணி வரை மட்டுமே இயங்கும். பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநில அரசும் அரை நாள் விடுமுறை அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications