ரத்தன் டாடா குடும்பம் வழங்கிய நன்கொடை.. அம்பானியின் சொத்து மதிப்பையே நெருங்கும்.. ஆச்சர்யமான தகவல்
டெல்லி: இந்தியாவின் தாராளமாக நன்கொடைகளை வழங்கியவர்கள் பட்டியலில் ரத்தன் டாடாவும் அவரது தாத்தாவும் ஜாம்செட்ஜி டாடாவும் இருப்பார்கள். இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்.. இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.. இந்த வரிக்கு முழுமையாக சொந்தக்காரர் டாடா.. அவரது தாத்தா, அப்பா, மூதாதையர்கள் என அவர்களது குடும்பம் வழங்கிய நன்கொடை மதிப்பு ரூ. 8.29 லட்சம் கோடியாகும்.. அதாவது அம்பானியின் சொத்து மதிப்பில் 80 சதவீதம் ஆகும்.
இந்தியாவில் யார் அதிக நன்கொடை வழங்கியவர்கள் என்ற பட்டியலை எடுத்து பார்த்தால் முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா மற்றும் அசிம் பிரேம்ஜி போன்ற பெயர்கள் அடிக்கடி நினைவுக்கு வரும். ஆனால் உலகின் மிகப்பெரிய தொண்டு நிறுவனம் என்ற பட்டம் டாடா குழுமத்தின் நிறுவனர் ஜாம்செட்ஜி டாடாவின் தொண்டு நிறுவனம் ஆகும். ஜாம்செட்ஜி டாடா இந்தியாவிற்கு ஆற்றிய பங்களிப்புகள் வியக்க வைக்கும். மொத்தம் ரூ. 8.29 லட்சம் கோடி நன்கொடையாக தந்துள்ளது ஜாம்செட்ஜி டாடா தொண்டு நிறுவனம். அம்பானி உள்பட இந்தியாவில் எந்த பணக்காரரையும் இவர் தந்த நன்கொடை மதிப்பு மிக அதிகம். ஜாம்செட்ஜி டாடா மார்ச் 3, 1839 இல் பிறந்தார். இந்திய தொழில்துறையின் தந்தை என்று போற்றப்படும் இவரது பெயரில் தான், இந்தியாவின் புகழ் பெற்ற தொழில் நகரமான ஜாம்ஷெட்பூர் இருக்கிறது.

ஜாம்செட்ஜி டாடா பெயரில் உள்ள தொண்டு நிறுவனம் வழங்கிய நன்கொடை மதிப்பு 8.29 லட்சம் கோடி என்று கூறப்படுகிறது. 2021 EdelGive Hurun வெளியிட்ட அறிக்கையின்படி, ஜாம்செட்ஜி டாடாவின் தொண்டு நன்கொடைகள் முகேஷ் அம்பானி, கௌதம் அதானி, அசிம் பிரேம்ஜி மற்றும் ஷிவ் நாடார் போன்றவர்களின் சொத்துக்கள் மற்றும் அவர்கள் வழங்கிய நன்கொடைகளை விட அதிகம். மருத்துவம் மற்றும் கல்வியின் மீது அதிக கவனம் செலுத்திய டாடா, ஏராளமான கல்வி நிறுவனங்களை உருவாக்கினார். அவர் செய்த தொண்டுக்கள் அனைத்தும் இன்று அவரது புகழ் பாடி வருகிறது.
ரத்தன் டாடாவின் தந்தை ஜாம்செட்ஜி டாடா 1868 இல் டாடா குழுமத்தை நிறுவியபோது சாதாரண ஒரு நிறுவனம். ஆனால் இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் மதிப்புமிக்க நிறுவனமாக இன்று வளர்ந்துள்ளதற்கு ரத்தன் டாடா மிக முக்கிய காரணம் ஆகு. டாடா குழுமத்தின் சொத்து மதிப்பு சுமார் 24 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இன்று, டாடா குழுமம் 10 தொழில்களில் 30 க்கும் மேற்பட்ட நிறுவனங்களைக் கொண்டிருக்கிறது.
குஜராத்தில் ஒரு ஜோராஸ்ட்ரியன் பார்சி குடும்பத்தில் பிறந்த ஜாம்செட்ஜி டாடா வெறும் பணம் சம்பாதிப்பதை தாண்டி, மகன்களான , டோராப்ஜி டாடா மற்றும் ரத்தன்ஜி டாடா, ஆகியோருக்கு சமூக பொறுப்பையும், மக்களுக்கு வேண்டிய நல்ல விஷயங்களையும் தொண்டுக்களையும் செய்ய வேண்டும் என்றும் சொல்லியே வளர்த்தார். இதில் ரத்தன்ஜி டாடா தத்தெடுத்த நேவல் டாட்டாவின் மகனாக பிறந்தவர் தான் இன்றைய ரத்தன் டாடா.. ரத்தன் டாடா, தனது தாத்தா, அப்பாக்களை போல் நன்கொடைகளை அள்ளி வழங்கி வருகிறார். ஜாம்செட்ஜி டாடாவைப் போல் அவரது குடும்பம் கல்வி மற்றும் சுகாதாரத்தில் இன்று கவனம் செலுத்தி நன்கொடைகளை வாரி வழங்கி வருகிறது. ரத்தன் டாடா தன் வாழ்நாளில் 1.2 பில்லியன் டாலர் நன்கொடை அளித்துள்ளார். இந்திய மதிப்பில் 9000 கோடி ரூபாய் வழங்கி உள்ளார்.












Click it and Unblock the Notifications