ஆடிய ஆட்டமென்ன.. டாலருக்கு ஆப்பு வைக்கும் ரிசர்வ் வங்கி! பிரிக்ஸ் நாடுகளுக்கு கொடுத்த அடடே ஐடியா!
டெல்லி: உலக நாடுகளின் சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை குறைக்கும் நோக்கில், பிரிக்ஸ் (BRICS) நாடுகளின் டிஜிட்டல் நாணயங்களை ஒருங்கிணைக்கும் புதிய யோசனையை இந்திய ரிசர்வ் வங்கி முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த முயற்சியின் மூலம், பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கிடையேயான வர்த்தகம், சுற்றுலா மற்றும் பிற பரிவர்த்தனைகள் மிகவும் எளிதாகவும், விரைவாகவும் நடைபெற வாய்ப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.
அமெரிக்க டாலர் தான் தற்போது உலக அளவில் மிகவும் வலிமையான நாணயமாக திகழ்கிறது. கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு உள்ளிட்ட முக்கியமான சரக்குகளை உலக நாடுகள் டாலரை பயன்படுத்தியே வாங்க வேண்டிய கட்டாயம் இருப்பதே இதற்கான முக்கிய காரணமாகும்.
இதன் விளைவாக, பல நாடுகள் தங்களது உள்ளூர் நாணயத்தை டாலராக மாற்றிக் கொண்டு, அதன் பின்னரே சர்வதேச வர்த்தகத்தை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. இந்த அமைப்பே அமெரிக்க டாலரை உலகின் ஆதிக்க நாணயமாக மாற்றியுள்ளது.

அமெரிக்க டாலர்
சர்வதேச வர்த்தகத்தில் டாலரின் இந்த ஆதிக்கம், அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக அமெரிக்காவுக்கு பெரும் பலத்தை வழங்கி வருகிறது. இதனை உணர்ந்த பல நாடுகள், சமீப ஆண்டுகளாக டாலரை சார்ந்திருப்பதை குறைப்பதற்கான மாற்று வழிகளை ஆராயத் தொடங்கியுள்ளன. அந்த வகையில், டாலரின் ஆதிக்கத்தை சவாலிடும் முயற்சிகளை முதலில் தொடங்கியது சீனா என பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். சீனா, தங்கச் சேமிப்பை அதிகரித்து வருவதோடு, தனது நாணயமான யுவானை சர்வதேச அளவில் பயன்படுத்தும் முயற்சிகளையும் தீவிரப்படுத்தி வருகிறது.
பிரிக்ஸ் டிஜிட்டல் நாணயம்
இதன் தொடர்ச்சியாக, இந்தியாவும் தற்போது டாலரை மையமாகக் கொண்ட வர்த்தக அமைப்பில் இருந்து விலகும் நோக்கில் புதிய யோசனைகளை முன்வைத்து வருகிறது. அதில் முக்கியமானதாக, பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் மத்திய வங்கிகள் தங்களது டிஜிட்டல் நாணயங்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற ரிசர்வ் வங்கியின் பரிந்துரை கருதப்படுகிறது. இந்த ஒருங்கிணைப்பு நடைமுறைக்கு வந்தால், பிரிக்ஸ் நாடுகளுக்கிடையே நடைபெறும் வர்த்தக பரிவர்த்தனைகளுக்கு டாலர் தேவையற்றதாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கி யோசனை
பிரிக்ஸ் கூட்டமைப்பில் தற்போது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய ஐந்து நாடுகளுடன், சமீபத்தில் இணைந்த ஆறு புதிய நாடுகளும் உறுப்பினர்களாக உள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னெடுத்த கடுமையான வரிவிதிப்பு மற்றும் வர்த்தகக் கொள்கைகள் காரணமாக, பிரிக்ஸ் நாடுகளும் பொருளாதார அழுத்தங்களை சந்தித்து வருகின்றன. இந்தச் சூழலில், ரிசர்வ் வங்கியின் இந்த யோசனை கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
டிஜிட்டல் நாணய ஒருங்கிணைப்பு
இந்த ஆண்டில் இந்தியா தலைமையேற்று நடத்த உள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில், டிஜிட்டல் நாணய ஒருங்கிணைப்பு தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டிலேயே, உறுப்பு நாடுகளுக்கிடையேயான பரிவர்த்தனை அமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இ-ரூபி சர்வதேச பயன்பாடு
சர்வதேச வர்த்தகத்தை எளிதாக்கவும், ரூபாயின் மதிப்பை பாதுகாக்கவும், இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 2022 டிசம்பரில் 'இ-ரூபி' என்ற டிஜிட்டல் நாணயத்தை அறிமுகப்படுத்தியது. இதுவரை சுமார் 70 லட்சம் வாடிக்கையாளர்கள் இந்த டிஜிட்டல் ரூபியை பயன்படுத்தி வருகின்றனர். இ-ரூபியும், நாம் பயன்படுத்தும் வழக்கமான ரூபாயும் ஒரே மதிப்பைக் கொண்டவை என்றாலும், இது நேரடியாக ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படுவதால் பாதுகாப்பு அதிகம் என கூறப்படுகிறது.
ஸ்டேபிள் காயின்
பிரிக்ஸ் நாடுகளில் பலவும் தற்போது சோதனை அடிப்படையில் தங்களது டிஜிட்டல் நாணயங்களை பயன்படுத்தி வருகின்றன. குறிப்பாக, டிஜிட்டல் யுவானை சர்வதேச அளவில் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக சீனா அறிவித்துள்ளது. இதே நேரத்தில், 'ஸ்டேபிள் காயின்' என்ற கிரிப்டோ நாணயங்களை சில நாடுகள் பரிந்துரைத்தாலும், இந்தியா அதற்கு ஆதரவு அளிக்கவில்லை. டிஜிட்டல் கரன்சி மட்டுமே பாதுகாப்பானது என்பதே ரிசர்வ் வங்கியின் தெளிவான நிலைப்பாடாக இருந்து வருகிறது. இந்த நிலையில், பிரிக்ஸ் நாடுகளின் டிஜிட்டல் நாணய ஒருங்கிணைப்பு முயற்சி நடைமுறைக்கு வந்தால், சர்வதேச வர்த்தகத்தில் டாலரின் ஆதிக்கம் குறையவும், வளர்ந்து வரும் நாடுகளுக்கு புதிய பொருளாதார வாய்ப்புகள் உருவாகவும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications