Paytm செயலியை இனி பயன்படுத்த முடியாதா? பேடிஎம் வங்கி சேவைகளுக்கு தடை.. ரிசர்வ் பேங்க் அதிரடி!
டெல்லி: பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் செயல்பாடுகளை முற்றிலுமாக நிறுத்துமாறு ரிசர்வ் வங்கி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் கிராமங்கள், நகரங்கள் என வேறுபாடின்றி எல்லா இடங்களிலும் டிஜிட்டல் பணப்பரிமாற்ற புழக்கம் அதிகரித்துவிட்டது. டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு ஏராளமானோர் பயன்படுத்தும் செயலியாக பேடிஎம் (Paytm) உள்ளது. இந்நிலையில், பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை தொடர்ந்து மீறி வருவதாக கூறி, பேடிஎம் நிறுவனம் மீது அதிரடி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் செயல்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 29ஆம் தேதி முதல் பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் செயல்பாடு நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு, புதிய வாடிக்கையாளர்களை இணைத்துக் கொள்ள பேடிஎம் பேமெண்ட் பேங்க் நிறுவனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் தணிக்கையாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், தொடர் விதி மீறலில் பேடிஎம் பேமென்ட்ஸ் பேங்க் ஈடுபட்டது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, பேடிஎம் மீது கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பேடிஎம்-ல் பணத்தை புதிதாக டெபாசிட் செய்யவும், பண பரிமாற்றம் செய்யவும் உதவும் பேமெண்ட்ஸ் பேங்க் செயல்பாடு நிறுத்தப்படுகிறது. ஃபாஸ்டேக், ப்ரீபெய்டு வசதிகளை வழங்கவும் பேடிஎம் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், பேடிஎம் வாலட்களில் ஏற்கனவே உள்ள தொகையை பயன்படுத்த தடை இல்லை. அதேபோல, பேடிஎம் யுபிஐ சேவைகளை பயன்படுத்தவும் தடை இல்லை. யுபிஐ மூலம் பணப் பரிமாற்றம் செய்வதற்கு தொடர்ந்து பேடிஎம் செயலியை பயன்படுத்தலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications