ஆட்டோ டெபிட் ரூல்ஸ்களில் இருந்த பெரிய தலைவலி இனி இல்லை.. ரிசர்வ் வங்கி விதிகளில் மேஜர் மாற்றம்!
டெல்லி: ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா எனப்படும் ஆர்.பி.ஐ ஆட்டோ டெபிட் விதிகளில் முக்கிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. மாதாந்திர சப்ஸ்கிரிப்ஷன் கட்டனம், எஸ்.ஐ.பிக்கள் , காப்பீடு பிரிமீயம்கள், கிரெடிட் கார்டு பில்ஸ்கள் மற்றும் மின்சாரம் போன்ற யூட்டிலிட்டி கட்டணங்களை செலுத்துவது இனி எளிதானதாக மாறப்போகிறது.
அதாவது, இனி 15 ஆயிரத்திற்கு கீழ் உள்ள தொகையாக இருந்தால் தானகாவே வங்கி கணக்கில் இருந்து டெபிட் ஆகிக்கொள்ளும். ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கேட்கப்படும் ஓடிபி இனி கேக்காது. எளிய வார்த்தைகளில் சொல்வது என்றால், நீங்கள் ஒருமுறை ஆட்டோமேட்டிக் கட்டணத்திற்கு அனுமதி அளித்திருந்தால், அந்த வரம்புக்குள் (ரூ.15,000) வரும் அடுத்தடுத்த மாத கட்டணங்கள் இனி சுலபமாக, தடையின்றி டெபிட் ஆகிக்கொள்ளும்.

எளிதாக இருக்கும்
இதனால், ஒடிபி தவறு ஆகியவற்றால் கட்டணம் செலுத்துதலில் ஏற்படும் இடையூறுகள் இனி தவிர்க்கப்படும். இதனால் குறைவான தொகை கொண்ட சப்ஸ்கிரிப்ஷன் கட்டணங்கள் செலுத்துதல் எளிதாக இருக்கும். இணையதள கட்டணங்கள், எஸ்ஐபி instalments போன்றவைகளுக்கு இனி கட்டணம் டெபிட் என்பது சுமூகமாக இருக்கும். டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் இருந்த மிகப்பெரிய தொல்லையாக உணரப்பட்ட ஒன்றை ரிசர்வ் வங்கி மாற்றியிருப்பதாக பயனர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏனெனில் இது தொடர்பாக பயனர்கள் பலர் கூறுகையில், மாதம் தோறும் செலுத்தப்படும் கட்டணங்கள் சில நேரங்களில் தவிர்க்க முடியாத காரணங்களால் தோல்வி அடைகின்றன. சில நேரங்களில் ஓடிபி மிகவும் தாமதாக வந்து சேரும். செல்போன்களுக்கு சில நேரங்களில் உரிய சிக்னல்கள் கிடைக்காது. அல்லது பயனர்கள் ஓய்வில் இருப்பார்கள். தூங்கி கொண்டு இருக்கலாம். அல்லது பயணத்தில் இருப்பார்கள். இதுபோன்ற நேரங்களில் ஓடிபியை செலுத்த முடியாது. இதனால் சப்ஸ்கிரிப்ஷனுக்கான கட்டணங்கள் செலுத்துவதில் இடையூறு ஏற்படும்.
மெசேஜ் அலர்ட் வரும்
எஸ்.ஐ.பி தேதிகள், இன்சூரன்ஸ் கட்டணங்கள் தாமதம் ஆகலாம். அதேபோல, தாமதங்களால் கிரெடிட் கார்டு அபராதங்கள் விதிக்கப்படலாம். ஆனால் தற்போது கொண்டு வரப்பட உள்ள ஆட்டோமெடிக் ஆப்ஷன்களால் இந்த சிரமங்கள் தவிர்க்கப்படும். முதல் முறை ஆட்டோ டெபிட் ஆப்ஷன் கொடுக்கும் பொது பயனர்கள் ஓடிபி அளித்து ஒப்புதல் அளிக்க வேண்டும் அல்லது கேட்கப்படும் ஒப்புதலை அளிக்க வேண்டும்.
முதல் ஒப்புதலுக்கு பிறகுதான், அடுத்தடுத்து மாதம் தோறும் வரும் எதிர்கால கட்டண செலுத்துதல்கள் தானாக அக்கவுண்டில் இருந்து பிடித்தம் செய்து கொள்ளப்படும். எனினும், பயனர்களுக்கு உரிய நேரத்தில் தகவல் தெரிவிக்கும் வகையில், ஆட்டோ டெபிட் பிடித்தம் செய்வதற்கு முன்பாக முன்கூட்டியே டெபிட் அலர்ட் என்பது வழக்கம் போல வரும். அதேபோல, கட்டணம் பிடித்தம் செய்து கொள்ளப்பட்டாலும் வழக்கம் போல மெசேஜ் அலர்ட் என்பது வரும். கட்டணம் செலுத்தும் முறை எளிதாக இருந்தாலும் பயனர்களுக்கு தெரியாமல் இது நடக்காது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications