ராகுல் விட்டுக் கொடுத்தால் அமேதி இடைத்தேர்தலில் போட்டியிட ரெடி... பிரியங்கா காந்தி
டெல்லி: அமேதியை தொகுதியை ராகுல் காந்தி விட்டுக் கொடுத்தால் லோக்சபா இடைத்தேர்தலில் தாம் போட்டியிட தயார் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் அமேதி மற்றும் வயநாடு தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அமேதியை உள்ளடக்கிய கிழக்கு உத்தரப்பிரதேச காங்கிரஸ் பொதுச்செயலராக அவரது சகோதரி பிரியங்கா காந்தி பணியாற்றி வருகிறார்.

அமேதி, வயநாடு இரண்டிலும் ராகுல் வெற்றி பெற்றால் ஏதேனும் ஒரு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அப்படி அமேதி தொகுதியை ராகுல் காந்தி விட்டுக் கொடுத்தால் போட்டியிட தயாரா? என்று பிரியங்காவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த பிரியங்கா காந்தி, அமேதியில் போட்டியிடுவது ஒன்றும் சவாலானது அல்ல. என்னுடைய சகோதரர் ராகுல் காந்திதான் முடிவு செய்ய வேண்டும். அவர் அமேதியை விட்டுக் கொடுக்க முன்வந்தால் இடைத்தேர்தலில் போட்டியிட நானும் தயார் எனக் கூறியுள்ளார்.
அமேதி, ரேபரேலி லோக்சபா தொகுதிகளை இந்திரா காலம் முதல் அவரது குடும்பத்தினர் தக்க வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications