Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீட் தேர்வு விலக்கு: பிடிகொடுக்க மறுத்த அமித் ஷா.. பொறுமையிழந்த டிஆர் பாலு.. நடந்தது என்ன? பின்னணி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நீட் தேர்வை அறிமுகப்படுத்தியது. அதன்படி இனி அனைத்து மருத்துவ படிப்புகளுக்கான இடங்களும் நீட் மூலமே நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதேநேரம் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கிட்டதட்ட அனைத்து கட்சிகளும் நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அனைத்து கட்சிகளின் நிலைப்பாடாக உள்ளது.

இது தொடர்பாகக் கடந்த அதிமுக ஆட்சியிலேயே மசோதா நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், குடியரசுத் தலைவர் அதற்கு ஒப்புதல் அளிக்காததால் அது நிறைவேறவில்லை.

திமுக

திமுக

அதேபோல திமுக ஆட்சி அமைந்த உடனும் இது தொடர்பாகத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் நீட் விலக்கு சட்ட மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனாலும், அதன் பின்னர் இந்த விவகாரத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. நீட் விவகாரத்தில் திமுக அரசு மிகவும் உறுதியாகவே உள்ளது. தேர்தல் பிரசார சமயத்திலேயே ஆட்சி அமைத்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்பது திமுக அளித்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாக இருந்தது. குறிப்பாக, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி நீட் விலக்கு தொடர்பாகப் பல இடங்களிலும் பேசினார். அதற்குப் பொதுமக்களின் ஆதரவும் அதிகமாகவே கிடைத்தது.

 நீட் எதிர்ப்பு

நீட் எதிர்ப்பு

அதேபோல ஆட்சி அமைத்தவுடன் நீட் பாதிப்பு குறித்து ஆராய ஏகே ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு நீட் பாதிப்பு குறித்த தனது அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. இதை எல்லாம் அடிப்படையாக வைத்தே திமுக அரசு நீட் எதிர்ப்பு மசோதாவை தயார் செய்திருந்தது. இந்த மசோதா தமிழக சட்டசபையில் முழு மனதாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநரிடம் அனுப்பப்பட்டது. இருப்பினும், கடந்த ஆட்சியில் என்ன நடந்ததோ அதே தான், இப்போது மீண்டும் நடக்கிறது. பல மாதங்கள் கடந்த பின்னரும் கூட ஆளுநர் அந்த மசோதாவை மத்திய உள்துறைக்கு அனுப்பாமல் இருந்து வருகிறது. இதற்கிடையே இது தொடர்பாக அனைத்து கட்சி எம்பிக்கள் டெல்லியில் முகாமிட்டனர்.

 தமிழக எம்பிக்கள்

தமிழக எம்பிக்கள்

டி.ஆர்.பாலு தலைமையிலான இந்தக் குழுவில் அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன், காங்கிரஸ் எம்.பி ஜெயக்குமார், விசிக எம்.பி திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் செல்வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெங்கடேசன், ஐயுஎம்எல் எம்பி நவாஸ் கனி இடம் பெற்றிருந்தனர். இவர்கள் கடந்த டிச. 29ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமீத் ஷாவை சந்திக்கச் சென்றனர். ஆனால், முன்பே நேரம் ஒதுக்கப்படாததால் அவர்களைச் சந்திக்க உள்துறை அமைச்சரின் செயலாளர்கள் அனுமதிக்கவில்லை. அதற்கு மறுநாளும் இதே நிலைதான்.

 உள் துறை அமைச்சர்

உள் துறை அமைச்சர்

இதற்கிடையே சட்டசபை கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு, உள் துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தே தீர வேண்டும் என்பதில் எம்பி குழு தீவிரமாக இருந்தது. அதற்காக மீண்டும் திங்கட்கிழமை டெல்லி சென்றது இந்த குழு. ஆனால், உள் துறையில் இருந்து இந்த முறையும் அதே பதில் தான். நாட்கள் கடந்ததே தவிர அமைச்சரைச் சந்திக்க எம்பிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் தமிழக எம்பிக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

Recommended Video

    இன்றைய சட்டமன்றம்: நீட்டுக்கு எதிரான போராட்டம் தொடரும்.. Stalin உறுதி
     இது தான் காரணம்

    இது தான் காரணம்

    சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில், நீட் குறித்தும் காரசார விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தான் அமைச்சர் அமித் ஷாவை எப்படியாவது சந்திக்க வேண்டும் என்பதில் தமிழக எம்பி குழு உறுதியாக இருந்தது. அப்போது தான் நீட் தொடர்பாக மத்திய அமைச்சரையே சந்தித்து அழுத்தம் கொடுத்தோம் என்று எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்குப் பதில் கூறலாம் எனத் திட்டமிட்டிருந்தது. இதை அறிந்து கொண்டே அமைச்சர் அமித் ஷா தமிழக எம்பிக்களை சந்திக்க மறுத்ததாகக் கூறுகிறது டெல்லி வட்டாரங்கள்!

     பொறுமையை இழந்த டி.ஆர் பாலு

    பொறுமையை இழந்த டி.ஆர் பாலு

    இதனால் தான் பொறுமையை இழந்த டி.ஆர் பாலு நேரடியாக ஆளுநரை விமர்சித்துப் பேசினார். இதனால் தான் "நீட் தேர்வு விலக்கு கோரும் மசோதா குறித்து இந்திய உள்துறை அமைச்சரைச் சந்திக்க 3 முறை முயன்றும் முடியவில்லை. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை சட்டமாக்க ஆளுநரே அதை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். ஆனால், தமிழ்நாடு ஆளுநர் வேண்டுமென்றே நீட் விலக்கு மசோதாவை மத்திய உள்துறைக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தி வருகிறார். அரசியலமைப்பின் மீது பதவி ஏற்றுக் கொண்ட ஆளுநர், அதைக் குழி தோண்டி புதைத்துள்ளார். அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக அவர் செயல்படுகிறார். ஆளுநர் பதவி விலக வேண்டும்," என்று கடுகடுத்தார் டிஆர் பாலு!

     அனைத்துக் கட்சி கூட்டம்

    அனைத்துக் கட்சி கூட்டம்

    அதாவது சட்டசபை கூட்டத்தொடர் 2 நாட்களே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில். கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு அமைச்சரைச் சந்திக்க வேண்டும் என்பதே எம்பிக்கள் குழுவின் திட்டம். ஆனால், அது முடியாததால் டென்ஷனாகி கடுகடுத்துள்ளார் டிஆர் பாலு. இந்தச் சூழலில் தான் இன்று சட்டசபையில் நீட் விலக்கு தொடர்பாக நாளை மறுநாள் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+