ஹை அலர்ட்.. சிவப்பு நிற ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி காரை தீவிரமாக தேடும் போலீஸ்!
டெல்லி: டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சிவப்பு நிற ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி காரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், இக்கார் ஹரியானாவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
இந்த கார் தொடர்பாக நாடு முழுவதும் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. டெல்லி எல்லை சோதனைச் சாவடிகளை இந்த கார் கடந்திருக்கிறதா? என்று சிசிடிவி கேமராவை கொண்டு போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் பஹல்காமில் நடந்த மற்றொரு வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து இது நிகழ்ந்துள்ளது. தேடப்பட்டு வந்த எஸ்யூவி கார், ஃபரிதாபாத்தில் உள்ள அல்-ஃபலா மருத்துவக் கல்லூரியில் பணிபுரிந்த டாக்டர் உமர் உன் நபி என்பவருக்குச் சொந்தமானது.
விசாரணையில், உமர் உன் நபி ஒரு பயங்கரவாதக் குழுவின் உறுப்பினராக இருந்துள்ளார் என்பதும், உளவுத் துறைகளின் அழுத்தம் காரணமாக அவர் தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டார் என்பதும் தெரியவந்துள்ளது. டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியானா மாநில காவல்துறையினர் வாகனத்தையும், சந்தேக நபர்களையும் கண்டுபிடிக்க டெல்லி போலீசாருடன் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த சம்பவம் குறித்து அல்-ஃபலா பல்கலைக்கழகம், சந்தேக நபருடன் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று பகிரங்கமாக அறிவித்துள்ளதுடன், விசாரணை அதிகாரிகளுடன் முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications