டெல்லியின் 9வது முதல்வராக பதவியேற்றார் பாஜக ரேகா குப்தா.. துணை முதல்வர் ஆனார் பர்வேஷ்!
டெல்லி: டெல்லியின் 9வது முதல்வராக பாஜகவின் ரேகா குப்தா இன்று பதவியேற்றுக்கொண்டார். டெல்லியின் துணை நிலை ஆளுநர் சக்சேனா, ரேகா குப்தாவுக்கு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். துணை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஷ் வர்மா பதவியேற்றார். அமைச்சர்களாக மன் ஜிந்தர் சிங், ஆஷிஷ் சூட், பங்கஜ் சிங், ரவீந்தர் சிங், கபில் மிச்ரா ஆகியோரும் பதவியேற்றனர். டெல்லி முதல்வர் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, அமித்ஷா, ஜேபி நட்டா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. நேற்று நடந்த அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், முதல்வராக ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்டார். பிரதமர் மோடி முன்னிலையில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில், இன்று ரேகா குப்தா பதவியேற்றார்.

டெல்லி சட்டமன்ற தேர்தல்
டெல்லி சட்டமன்ற தேர்தல் கடந்த 5 ஆம் தேதி நடந்தது. இதில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியாக களம் கண்டன. டெல்லி சட்டமன்ற தேர்தலில் கடந்த 3 முறை தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மியை பாஜக வீழ்த்தி வெற்றி பெற்றது. மொத்தம் 70 சட்டமன்ற தொகுதிகளில் 48 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய வேட்பாளர்கள் கூட தோல்வியை தழுவினர். அரவிந்த் கெஜ்ரிவாலும் தோல்வியை தழுவினார். மொத்தம் ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் தனித்து போட்டியிட்ட காங்கிரஸ் ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை.
27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சி
இதனால் 27 ஆண்டுகளுக்கு பிறகு தலைநகர் டெல்லியில் பாஜக ஆட்சி அமைந்தது. ஆனால் தேர்தல் முடிந்து இரண்டு வாரங்கள் ஆகியும் முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. கடந்த 17 ஆம் தேதி பாஜக எம் எல் ஏக்கள் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. கட்சியின் மாநில தலைவரான வீரேந்த்திர சச்தேவா டெல்லி முதல்வர் தேர்வு தொடர்பாக மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
#WATCH | Delhi CM-designate Rekha Gupta does a 'Namaste' to the crowd at Ramlila Maidan. She will take oath as the Chief Minister shortly. pic.twitter.com/DItZ3mw9ct
— ANI (@ANI) February 20, 2025
டெல்லி முதல்வராக ரேகா குப்தா
டெல்லி முதல்வர் பட்டியலில், அரவிந்த் கெஜ்ரிவாலை வீழ்த்திய பர்வேஷ் சர்மா பெயரும், ரேகா குப்தா, முன்னாள் முதல்வர் சுஷ்மா சுவராஜின் மகள் பன்சூரி சுவராஜ் எம்.பி. ஆகியோரது பெயரும் இடம்பெற்று இருந்தது. மோடி அமெரிக்கா சென்றிருந்ததால், அவர் வந்த பிறகு இது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது. உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜே.பி. நட்டா உள்ளிட்டோருடன் ஆலோசனை நடந்தது.
இதனை தொடர்ந்து நேற்று இரவு பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பாஜகவின் 48 எம் எல் ஏக்களும் கலந்துகொண்டனர். கட்சியின் மாநில தலைவரான வீரேந்திர சச்தேவாவும் கலந்துகொண்டார். தொடர்ந்து இந்த கூட்டத்தில், முதல் முறையாக எம்எல்ஏவாக தேர்வாகியுள்ள ரேகா குப்தா என்ற பெண் எம்எல்ஏ டெல்லி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றார்
இந்த நிலையில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று மதியம் நடந்த பதவியேற்பு விழாவில், டெல்லி முதல்வராக ரேகா குப்தா முதல்வராக பதவியேற்றார். டெல்லி முதல்வராக ரேகா குப்தாவுக்கு துணைநிலை ஆளுநர் விகே சக்சேனா பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். தொடர்ந்து டெல்லியின் துணை முதல்வராக பர்வேஷ் வர்மா, அமைச்சர்களாக மன் ஜிந்தர் சிங், ஆஷிஷ் சூட், பங்கஜ் சிங், ரவீந்தர் சிங், கபில் மிச்ரா ஆகியோரும் பதவியேற்றனர்.
பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜேபி நட்டா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மத குருமார்களும் பங்கேற்றார்கள். டெல்லி முதல்வர் பதவியேற்பு விழாவை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
யார் இந்த ரேகா குப்தா
பிரதமர் மோடியும் பங்கேற்றதால், சுமார் 25 ஆயிரம் போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். 50 வயதாகும் ரேகா குப்தா, ஷாலிமார் பார்க் தொகுதியில் போட்டியிட்டு ஆம் ஆத்மி வேட்பாளர் பந்தனா குமாரியை சுமார் 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். கல்லூரி படிக்கும்போதே அரசியலில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தவர். அப்போதே டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்க நிர்வாகி தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார். இதன்பின்னர் அவர் பாஜகவில் சேர்ந்து 3 முறை கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடந்த 2022 மேயர் தேர்தலில் போட்டியிட்ட ரேகா குப்தா தோல்வியை சந்தித்தார். இதையடுத்து தான் தற்போது பாஜக அவருக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தது. கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தி 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுள்ள நிலையில் இன்று முதல்வராக பதவியேற்றார். இதன் மூலம் டெல்லியில் 4வது பெண் முதல்வராகவும், மாநிலத்தின் 9வது முதல்வராகவும் பதவியேற்றுள்ளார்.
பாஜக எம்எல்ஏ கூட்டத்தில் முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட ரேகா குப்தாவு நேற்று துணை நிலை ஆளுநர் விகே சக்சேனாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதையடுத்து இன்று டெல்லியின் முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றார்.
-
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
Periasamy Kumaran: இங்கிலாந்திற்கான இந்தியாவின் புதிய தூதராக பெரியசாமி குமரன் நியமனம்! யார் தெரியுமா இவர்?












Click it and Unblock the Notifications