முன்னணி ஊடகங்களுக்கு அபராதம்.. சில வீடியோக்களையும் நீக்க உத்தரவு.. மத்திய அரசு கெடுபிடி
டெல்லி: மதநல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் விதமாக வெறுப்புணர்வை பரப்பும் கருத்துகள் இடம் பெற்றதாக கூறி சில முன்னணி செய்தி தொலைக்காட்சி ஊடகங்களுக்கு மத்திய அரசின் ஒழுங்குமுறை ஆணையம் அபராதம் விதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது.
செய்தி தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களுக்கு சில நெறிமுறைகள் மத்திய அரசால் வகுக்கப்பட்டுள்ளன. இந்த வழிகாட்டுதல் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பதை மத்திய அரசின் செய்தி ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் தரநிலைகள் ஆணையம் (NBDSA) கண்காணித்து வருகிறது. செய்தி நிறுவனங்கள் நெறிமுறைகளை மீறி செய்திகளை ஒளிபரப்பு செய்தால் அந்த நிறுவனங்களுக்கு அபராதம் உள்ளிட்டவற்றை தர ஆணையம் விதிக்கும்.

இந்த நிலையில் தான், கடந்த இரண்டு ஆண்டுகளில் முன்னணி தொலைக்காட்சி ஊடகங்கள் ஒளிபரப்பு செய்த நிகழ்ச்சிகள் சில மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் விதமாக இருப்பதாக கூறி அவற்றை நீக்க என்.பி.டி.எஸ்.ஏ உத்தரவிட்டுள்ளது. அதாவது, நியூஸ் 18, டைம்ஸ் நவ், நவ்பாரத் மற்றும் ஆஜ்தக் ஆகிய செய்தி ஊடகங்களுக்கு எதிராகத்தான் இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
ரூ.1 லட்சம் அபராதம்: கடந்த ஆண்டு மும்பையில் நடந்த ஷர்த்தா வாக்கர் கொலையை லவ் ஜிகாத்த்துடன் ஒப்பிட்டு என்று நியூஸ் 18 சேனல் ஒளிபரப்பு செய்ததாகவும்.. லவ் ஜிகாத் என்ற வார்த்தையை அவசரகதியில் பயன்படுத்தக் கூடாது.. உரிய ஆய்வுக்கு பிறகே பயன்படுத்த வேண்டும் எனவும்.. மதம் சார்ந்த இத்தகைய கருத்துக்கள், நாட்டின் மதச்சார்பற்ற கட்டமைப்பை சிதைத்துவிடும் என்பதால் எதிர்காலத்தில் கவனமுடன் பயன்படுத்த வேண்டும் எனக்கோரி அந்த வீடியோக்களை நீக்க உத்தரவிட்டுள்ளது.
மேலும் 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல், கடந்த ஆண்டு மே 2023ல் லவ் ஜிகாத் என்ற பெயரில் நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்த டைம்ஸ் நவ் நவபாரத் சேனலுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது. என்.பி.டி.எஸ்.ஏ-வின் தலைவராக தற்போது ஓய்வு பெற்ற நீதிபதி ஏகே சிக்ரி உள்ளார். அவரது தலைமையிலான குழு மக்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் ஆய்வு செய்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
உத்தரவை மதித்து செயல்படுத்துவோம்: என்.பி.எஸ்.டி.ஏவின் இந்த உத்தரவு தொடர்பாக டைம்ஸ்நவ் நெட்வொர்க் கூறுகையில், " இந்த உத்தரவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். வரும் காலத்தில் மிகவும் கவனத்துடன் செயல்படுவோம் என்று கூறியுள்ளது. அதேபோல், பிரபல இந்தி சேனலான ஆஜ்தக், கடந்த ஆண்டு ராம நவமி ஊர்வலத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக ஒளிபரப்பு செய்தியை அதன் டிஜிட்டல் தளத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று NBDSA உத்தரவிட்டுள்ளது.
சில சமூக விரோதிகளின் செயலை ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் தொடர்பு படுத்தி செய்தி வெளியிட்டதாக கூறியுள்ள என்.பி.எஸ்.டி.ஏ தனது உத்தரவில் கூறியுள்ளது. இந்த உத்தரவு தொடர்பாக இந்தியா டுடே குழுமம் கூறுகையில், "இந்த உத்தரவு எங்களுக்கு அதிருப்தி கொடுத்தாலும் கூட, ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவை மதித்து அவற்றை செயல்படுத்துவோம்" எனத் தெரிவித்துள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications