Repo Rate: 5.25% தொடரும்.. ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.. இடியை இறக்கிய ரிசர்வ் வங்கி!
டெல்லி: ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை. தற்போது இருப்பதை போல் 5.25 சதவீதமாக தொடர்ந்து நீடிக்கும் என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். ரெப்போ வட்டி விகிதம் குறைந்தால் வங்கியின் வாங்கிய கடனுக்கான வட்டி குறையும். இதனால் ரெப்போ வட்டி விகிதம் குறையும் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் அதில் மாற்றம் செய்யப்படவில்லை.
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான விதிக்கப்படும் வட்டி விகிதத்தை ரெப்போ வட்டி விகிதம் என்று அழைக்கப்பட்டு வருகிறது.
இந்த ரெப்போ வட்டி விகிதம் 2 மாதத்துக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படும். இதனை ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வருகிறது.

ரெப்போவில் மாற்றமில்லை
இந்நிலையில் தான் ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். தற்போது இருப்பதை போல் 5.25 சதவீதம் என்ற அடிப்படையில் ரெப்போ வட்டி விகிதம் தொடரும் என்று அவர் கூறியுள்ளார்.
வங்கி கடனுக்கு முக்கியம்
ரெப்போ வட்டி விகிதம் தான் வங்கிகளில் மக்கள் வாங்கும் கடனுக்கான வட்டியை நிர்ணயம் செய்கிறது. ரெப்போ வட்டி விகிதம் குறைந்தால் வங்கியில் நாம் வாங்கிய வீடு, கார், கல்வி உள்ளிட்ட கடன்களுக்கு செலுத்த வேண்டிய வட்டி குறையும். ரெப்போ வட்டி விகிதம் அதிகரித்தால் வங்கியில் வாங்கிய கடனுக்கான வட்டியும் அதிகரிக்கும்.
பட்ஜெட்டால் எதிர்பார்ப்பு
இதனால் ரெப்போ வட்டி விகிதம் தொடர்பான இன்றைய அறிவிப்பை பலரும் எதிர்பார்த்தனர். ஏனென்றால் கடந்த ஆண்டு முதல் அடிக்கடி ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டு வந்தது. கடந்த டிசம்பர் மாதம் கூட குறைக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி கடந்த 1ம் தேதி தான் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதம் மாற்றம் தொடர்பான அறிவிப்பு முதல் முறையாக வெளியாகிறது என்பதால் அனைவரும் அதிகம் எதிர்பார்த்தனர்.
பொய்த்துப்போன எதிர்பார்ப்பு
ஆனால் எதிர்பார்ப்பு பொய்த்துப்போனது. இருப்பினும் ரெப்போ வட்டி விகிதம் அதிகரிக்கப்படவில்லை என்பது ஆறுதலான விஷயமாக உள்ளது.












Click it and Unblock the Notifications