டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரிபப்ளிக் டிவி லோக் சபா சர்வே.. அம்மாடி இத்தனை சீட்டா!.. தமிழகத்தில் வெற்றி யாருக்கு தெரியுமா?

லோக் சபா தேர்தலில் தமிழகத்தில் எந்த கட்சி வெற்றிபெறும் என்று ரிபப்ளிக் டிவியின் லோக் சபா சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Republic Survey:தமிழத்தில் யாருக்கு வெற்றி?

    டெல்லி: லோக் சபா தேர்தலில் தமிழகத்தில் எந்த கட்சி வெற்றிபெறும் என்று ரிபப்ளிக் டிவியின் லோக் சபா சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    லோக் சபா தேர்தல் கருத்து கணிப்புகள் வரிசையாக தற்போது வெளியாகி வருகிறது. நேற்றுதான் ஏபிபி செய்தி சேனலும், சி வோட்டர் செய்தி சேனலும் சேர்ந்து தேர்தல் குறித்து நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியானது.

    அதேபோல் அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவி சார்பாக நடத்தப்பட்ட லோக் சபா சர்வே முடிவுகளும் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தில் எத்தனை இடங்களில் எந்த கட்சி வெல்லும் என்று இந்த சர்வேயில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    எத்தனை இடங்கள்

    எத்தனை இடங்கள்

    சர்வேயின்படி தமிழகம் மற்றும் புதுச்சேரி சேர்த்து உள்ள 40 இடங்களில் திமுக - காங்கிரஸ் கூட்டணி 40 இடங்களையும் வெல்லும். மாறாக பாஜக - அதிமுக - மற்ற கட்சிகள் அனைத்தும் மொத்தமாக தோல்வியை தழுவும். திமுக கூட்டணி மாபெரும் வெற்றிபெறும் என்று சர்வேயில் கூறப்பட்டு இருக்கிறது.

    எத்தனை இடங்கள்

    எத்தனை இடங்கள்

    அதன்படி மொத்தம் 30 முதல் 31 இடங்களில் திமுக + சிறிய கூட்டணி கட்சிகள் வெல்லும். 9 இடங்களில் காங்கிரஸ் வெல்லும் என்று கூறப்பட்டு இருக்கிறது. இந்த கூட்டணியின் மொத்த வாக்கு சதவிகிதம் 44% ஆக இருக்கும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

    பெரிய சரிவு

    பெரிய சரிவு

    அதிமுகவின் ஓட்டு சதவிகிதம் 21.3, பாஜகவின் ஓட்டு சதவிகிதம் 6.7 மற்ற தேமுதிக, பாமக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் ஓட்டு சதவிகிதம் 27.8. இதன்படி அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தாலும் தமிழகத்தில் வெல்ல முடியாது என்று கூறப்பட்டு இருக்கிறது.

    பாஜக அதிர்ச்சி

    பாஜக அதிர்ச்சி

    சர்வே முடிவுகள் பாஜகவிற்கு பெரிய அதிர்ச்சி அளிக்க கூடியதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அனைத்து கருத்து கணிப்புகளிலும் தொங்கு நாடாளுமன்றம் உருவாகும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் பாஜக தோற்பது, இந்த தொங்கு நாடாளுமன்றத்திற்கு முக்கிய காரணமாக அமையும் என்று கூறப்படுகிறது.

    English summary
    Republic Survey: DMK - Congress will do a Thanos to BJP in Lok Sabha election as the UPA will smash all 39+1 seats in TN and Puducherry.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X