ஒன்றல்ல.. இரண்டல்ல.. காங்கிரசை 5வது முறையாக தூசி தட்டும் பாஜக.. மத்திய பிரதேசத்தில் மீண்டும் ஆட்சி!
போபால்: மத்திய பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் அங்கே மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என்று ரிபப்ளிக் டிவி-மேட்ரைஸ் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேசம் பொதுவாகவே பாஜக ஆதரவு மாநிலம். குஜராத்திற்கு அடுத்து.. ஏன் குஜராத்தை விட.. பாஜக ஆதரவு அதிகம் உள்ள மாநிலம் மத்திய பிரதேசம். பாஜகவின் கோட்டை என்று கூட இதை சொல்லலாம்.
மத்திய பிரதேசத்தில் 230 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கே பெரும்பான்மை பெறுவதற்கு 116 இடங்களில் வெல்ல வேண்டும். கடந்த 4 முறையாக அங்கே பாஜகதான் ஆட்சி செய்து வருகிறது. 3 முறையாக வரிசையாக அங்கே 2005ல் இருந்து 2013 வரை அங்கே பாஜக ஆட்சி செய்தது.
சிவராஜ் சிங் சவுகான் அங்கே ஆட்சி அமைத்தார். அதன்பின் கடந்த தேர்தலில் அங்கே காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. ஆனால் 1 வருடத்தில் அங்கே கமல்நாத் ஆட்சியை ஜோதிராதித்யா சிந்தியா கவிழ்த்தார். இவர் பாஜகவில் இணைந்து தன்னுடன் சில எம்எல்ஏக்களையும் அழைத்து சென்று ஆட்சியை கவிழ்த்தார். இதன்பின் வந்த இடைத்தேர்தலில் பாஜக கூடுதல் எம்எல்ஏக்களை மீண்டும் சிவராஜ் சிங் சவுகான் ஆட்சிக்கு வந்தார்;.
கவிழ்க்கப்பட்ட காங்கிரஸ் ஆட்சி: கடந்த தேர்தலில் காங்கிரஸ் 114, பாஜக 109 இடங்களில் வென்றது. அதன்பின் 1 வருடத்தில் 22 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிந்தியா தலைமையில் ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்தனர். தொடர்ந்து நடந்த இடைத்தேர்தலில் பாஜக 19 இடங்களில் வென்றது. இதன் மூலம் 128 இடங்கள் என்று மெஜாரிட்டி பெற்று பாஜக ஆட்சிக்கு வந்தது.

இந்த முறை தேர்தல்; பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த 5 மாநில தேர்தல் பார்க்கப்படுகிறது. அடுத்த வருடம் ஏப்ரல் - மே மாதம் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து தற்போது 5 மாநில தேர்தல் முடிவுகள் அதற்கு வரப்போகும் டீசர் போல பார்க்கப்படுகிறது. இதில் மத்திய பிரதேசம் - நவம்பர் 14ம் தேதி தேர்தல் நடந்தது.
கருத்து கணிப்பு: மத்திய பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் அங்கே மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என்று ரிபப்ளிக் டிவி-மேட்ரைஸ் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. இங்கே 230 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கே பெரும்பான்மை பெறுவதற்கு 116 இடங்களில் வெல்ல வேண்டும்.
இந்த நிலையில் ரிபப்ளிக் டிவி-மேட்ரைஸ் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில், காங்கிரஸ் 97-107 இடங்களில் வெல்லும் என்று கூறப்பட்டு உள்ளது. பாஜக 118-130 இடங்களில் வெல்லும் என்று கூறப்பட்டு உள்ளது. இதர கட்சிகள் 0-2 இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் கடந்த முறை போல இந்த முறை போல அல்லாமல் இந்த முறை மத்திய பிரதேசத்தில் பாஜக வலிமையாக ஆட்சி அமைக்கும் என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த முறை போல ஆட்சி கவிழ்ப்பு, ஆபரேஷன் தாமரை போன்ற விஷயங்களுக்கு தேவை இருக்காமல் பாஜக நேரடியாக ஆட்சிக்கு வரும் வாய்ப்புகள் உள்ள என்று கணிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications