‛அரசியல் என்ட்ரி’.. ராஜ்யசபா எம்பியாகும் ரகுராம் ராஜன்? காங்கிரஸ் போடும் மாஸ்டர் பிளான்! பலிக்குமா?
டெல்லி: ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான ரகுராம் ராஜனை ராஜ்யசபா உறுப்பினராக காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன்மூலம் அவரை அரசியலுக்கு கொண்டு வர காங்கிரஸ் கட்சி காய்நகர்த்தி வருகிறதாம்.
நாடாளுமன்றத்தில் 2 சபைகள் உள்ளன. ஒன்று லோக்சபா (மக்களவை). இன்னொன்று ராஜ்யசபா (மாநிலங்களவை). இதில் லோக்சபா எம்பிக்கள் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர். மாறாக ராஜ்யசபா எம்பிக்கள் ஒவ்வொரு மாநிலங்களின் எம்எல்ஏக்கள் ஓட்டளித்து தேர்வு செய்யப்படுகின்றனர்.

ராஜ்யசபா எம்பிக்களின் பதவிக்காலம் என்பது 6 ஆண்டுகளாகும். இந்நிலையில் தான் விரைவில் இந்தியாவில் 13 மாநிலங்களில் இருந்து தேர்வாகி இருந்த 56 ராஜ்யசபா எம்பிக்களின் பதவிக்காலம் ஏப்ரல் மாதம் 2 மற்றும் ஏப்ரல் 3ம் தேதிகளில் முடிவுக்கு வர உள்ளது.
அதன்படி உத்தர பிரதேசத்தில் 10, மகாராஷ்டிரா, பீகாரில் தலா 6, மேற்கு வங்கம், மத்திய பிரதேசத்தில் தலா 5, குஜராத், கர்நாடகாவில் தலா 4, ஆந்திரா, தெலுங்கானா, ராஜஸ்தான், ஒடிசா மாநிலங்களில் தலா 3, உத்தரகாண்ட், சத்தீஸ்கர், ஹரியானா, இமாச்சல பிரதேசத்தில் தலா ஒன்று என மொத்தம் 56 ராஜ்யசபா எம்பிக்களின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது.
இதையடுத்து அந்த 56 எம்பிக்களின் இடங்களுக்கு ராஜ்யசபா தேர்தலை பிப்ரவரி மாதம் 27 ம் தேதி நடத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து கட்சிகள் சார்பில் ராஜ்யசபா எம்பிக்களை நியமனம் செய்வதற்கான பணிகளை தொடங்கி உள்ளன. இந்த ராஜ்யசபா எம்பி பதவிக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்ய பிப்ரவரி மாதம் 15ம் தேதி கடைசி நாளாகும்.
இதனால் பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்பட 12 மாநிலங்களில் உள்ள கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் காங்கிரஸ் சார்பில் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனை ராஜ்யசபா உறுப்பினராக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதாவது கர்நாடகாவில் தற்போது காங்கிரஸ் ஆட்சி உள்ளது. இங்கிருந்து 4 பேர் ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட உள்ளன.
இத்தகைய சூழலில் தான் கர்நாடகாவில் இருந்து காங்கிரஸ் சார்பில் ராஜ்யசபா உறுப்பினராக ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான ரகுராம் ராஜன் தேர்வு செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இல்லாவிட்டால் மகாராஷ்டிராவில் இருந்து ராஜ்யசபா எம்பியாக அவர் தேர்வு செய்யப்படலாம் என சொல்லப்படுகிறது. ரகுராம் ராஜன் தற்போது காங்கிரஸ் கட்சியுடன் மிகவும் நெருக்கமாக உள்ளார். ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்று ஆதரவு வழங்கி இருந்தார். இந்நிலையில் தான் ரகுராம் ராஜன் காங்கிரஸ் சார்பில் ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
இருப்பினும் இதுபற்றி தற்போது வரை காங்கிரஸ் மற்றும் ரகுராம் ராஜன் சார்பில் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இது தற்போது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்பது விரைவில் வெளியாகலாம் என கூறப்படுகிறது. ஏனென்றால் மூத்த காங்கிரஸ் தலைவரான முன்னாள் பிரதமரும், பொருளாதார நிபுணருமான மன்மோகன் சிங்கின் ராஜ்யசபா பதவிக்காலம் என்பது விரைவில் முடிவுக்கு வர உள்ளது. வயது முதிர்வால் அவர் மீண்டும் ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்படமாட்டார் என காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் தங்களது கட்சியில் சிறந்த பொருளாதார நிபுணர் தேவை என்பதை உணர்ந்து மன்மோகன் சிங்கிற்கு பதில் ரகுராம் ராஜனை ராஜ்யசபா எம்பியாக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இருப்பினும் காங்கிரஸ் கட்சியின் முன்பு பெரிய சிக்கல் உள்ளது. அதாவது ரகுராம் ராஜன் இதற்கு முன்பு ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்று இருந்தார். அப்போது அவரிடம் காங்கிரஸ் கட்சியில் இணைய போகிறீர்களா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அப்போது அவர் தனக்கு அரசியலில் உடன்பாடில்லை என தெரிவித்து இருந்தார். மேலும் சில நாட்களுக்கு முன்பு கூட அவர் அளித்த பேட்டியில், ‛‛நான் கல்வியாளராக இருக்கிறேன். அரசியல்வாதி கிடையாது'' என தெரிவித்து இருந்தார். இத்தகைய சூழலில் தான் இந்த தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரகுராம் ராஜன் ராஜ்யசபா எம்பியாக அரசியலில் காங்கிரஸ் கட்சி மூலம் நுழைவாரா? இல்லையா? என்பதை அறிய இன்னும் சில நாட்கள் நாம் காத்திருக்க வேண்டும்.
-
ராகுல் வரலைன்னா.. பெரிய சிக்கலாகிடும்.. டெல்லியில் பதறிய தமிழக காங்கிரஸ் தலைகள்! என்னாச்சு? -
ராகுல் காந்தி தமிழகத்திற்கு வர மறுத்துவிட்டாரா? பிரச்சாரம் தாமதமாவது ஏன்? - கிரிஷ் சோடங்கர் விளக்கம் -
உண்மையான காங்கிரஸ் விஜய் பக்கமா.. அப்போ போலியான காங்கிரஸ் யார்? ப.சிதம்பரம் பதில்! -
காங்கிரஸுக்கு வில்லன் காங்கிரஸ் தான்.. திடீரென டெல்லிக்கு ஓடிய கர்நாடக MLAக்கள்! பதறும் சித்தராமையா -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி












Click it and Unblock the Notifications