சார் உங்கள டிஜிட்டல் அரெஸ்ட் பண்ணிருக்குது.. 8 மணி நேரத்தில் 10 கோடி அபேஸ்! திணறிப் போன இஞ்சினியர்.!
டெல்லி: இந்தியாவில் கடந்த சில வருடங்களாக சைபர் கிரைம் மோசடி அதிகரித்து வருகிறது குறிப்பாக டிஜிட்டல் கைது என்ற பெயரில் வயதானவர்களை குறி வைத்து மோசடி செய்து வரும் சம்பவம் அதிகரித்து வரும் நிலையில், டெல்லியில் 8 மணி நேரத்தில் 10 கோடி ரூபாயை இழந்திருக்கிறார் ஓய்வு பெற்ற பொறியாளர் ஒருவர்.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக வயதானவர்கள் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ள நபர்கள் பெண்களை குறிவைத்து அடையாளம் தெரியாத தொலைபேசி எண்களில் இருந்து பேசி மோசடி நடைபெறுவதாகவும், எனவே பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டுமென போலீசார் எச்சரித்துள்ளனர்.

இதற்கிடையே சட்டவிரோத பணப் பறிமாற்றம் தங்கள் வங்கிக் கணக்கில் நடைபெற்றுள்ளதாக, தொழிலதிபர்களை மிரட்டியும், டிஜிட்டல் கைது செய்துள்ளதாகக் கூறி சைபர் கிரைம் மோசடி நடப்பதாகவும், போலீசார் எச்சரிக்கின்றனர்.
இந்த நிலையில் 8:30 மணி நேரத்தில் தான் சேர்த்து வைத்திருந்த 10 கோடி ரூபாய் பணத்தை ஒட்டுமொத்தமாக இழந்து இருக்கிறார் பொறியாளர் ஒருவர். டில்லி ரோகிணி செக்டார் பகுதியைச் சேர்ந்த பொறியாளர் ஒருவரிடம் 10 கோடி ரூபாயை மர்ம நபர்கள் ஏமாற்றியது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓய்வு பெற்ற பொறியாளரும் அவரது மனைவியும் டில்லி ரோகிணி செக்டார் பகுதியில் வசித்து வருகிறார்கள்.
அவரது மகன் துபாயிலும், மகள் சிங்கப்பூரிலும் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் அந்த பொறியாளரை தொடர்பு கொண்ட மர்ம நபர் தைவானிலிருந்து அவருக்கு பார்சல் ஒன்று வந்துள்ளதாகவும் அந்த பார்சல் மும்பை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். மேலும் பார்சலில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் இருப்பதாகவும் இது தொடர்பாக மும்பை குற்றப்பிரிவு போலீசார் உங்களை தொடர்பு கொள்வார்கள் என கூறியுள்ளனர்.
தொடர்ந்து ஸ்கைப் எனப்படும் வீடியோ கால் செயலியை டவுன்லோடு செய்து வைத்துக் கொள்ளுங்கள் எனவும் அந்த நபர் கூறியுள்ளார். தொடர்ந்து ஸ்கைப் வீடியோ காலில் பேசிய மர்ம நபர் ஒருவர் டிஜிட்டல் முறையில் உங்களை கைது செய்திருக்கிறோம். 8 மணி நேரத்தில் நீங்கள் ஒரே இடத்தில் இருக்க வேண்டும் இல்லை என்றால் உங்கள் வீட்டில் வந்து கைது செய்து விடுவோம் என கூறியுள்ளார்.
தொடர்ந்து அவரது வங்கி கணக்கிலிருந்து 10.30 கோடி ரூபாய் விசாரணை முடியும் வரை அரசு வசம் செலுத்த வேண்டும் என வங்கி கணக்கு விவரங்களையும் கொடுத்திருக்கிறார். அவர் பணத்தை மாற்றியதும் அந்த இளைஞர்கள் தொடர்பை துண்டித்துக் கொண்டு நம்பரை பிளாக் செய்துள்ளனர். இதை அடுத்தே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் புகார் அளித்தார். தொடர்ந்து இதுகுறித்து டெல்லி சைபர் கிரைம் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் வெளிநாட்டிலிருந்து டார்க் வெப் தொழில்நுட்பம் மூலம் பேசி உள்ளதும், அவருக்கு உள்ளூர் நபர்கள் உதவியதும் தெரியவந்துள்ளது. இதற்போது வங்கி கணக்கிலிருந்து 60 லட்சம் ரூபாய் முடக்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள பணத்தை மீட்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாகவே இது போன்ற மோசடி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்கின்றனர் போலீசார்.












Click it and Unblock the Notifications