ராய்ட்டர்ஸ் எக்ஸ் வலைதள பக்கம் இந்தியாவில் முடக்கம்.. மத்திய அரசு தான் காரணமா? என்ன நடந்தது?
டெல்லி: முன்னணி செய்தி நிறுவனமான ராய்ட்டரிஸின் (Reuters) எக்ஸ் வலைதள பக்கம் நம் நாட்டில் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. 10க்கும் அதிகமான மொழிகளில் இந்த செய்தி நிறுவனம் உள்ளது. இந்த ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் உலக செய்திகள், பிசினஸ், சயின்ஸ், பொருளாதாரம் என்று தனித்தனியாக வலைதள பக்கங்களையும் வைத்துள்ளன.
அதேபோல் குறிப்பிட்ட நாடு, கண்டத்துக்கு என்று வலைதள பக்கங்களை ராய்ட்டர்ஸ் வைத்துள்ளன. இந்நிலையில் தான் நம் நாட்டில் ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் எக்ஸ் வலைதள பக்கம் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. நேற்று முதல் இந்த எக்ஸ் வலைதள பக்கம் செயல்படவில்லை.
ராய்ட்டர்ஸ் எக்ஸ் வலைதள பக்கத்தை திறந்தால் Account Withheld.. @Reuters has been withheld in IN in Response to a leagal demand என்று மட்டுமே வருகிறது. அந்த பக்கத்தில் உள்ள பிற விவரங்கள் எதுவும் வரவில்லை. இது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.
இந்நிலையில் தான் ராய்ட்டர்ஸ் எக்ஸ் பக்கத்தை மத்திய அரசு பரிந்துரையின் பேரில் இந்தியாவில் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. சில வேளைகளில் செய்தி நிறுவனங்கள் நம் நாட்டின் மீது அவதூறு பரப்பும் வகையில் செய்திகளையும், உண்மைக்கு புறம்பான செய்திகளையும் வெளியிடும். இப்படியான சூழலில் மத்திய அரசு அந்த குறிப்பிட்ட நிறுவனத்தின் இணையதளம், வலைதள பக்கங்களை முடக்கம் செய்த சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால் ராய்ட்டர்ஸ் எக்ஸ் வலைதள பக்கத்தையும் மத்திய அரசு பரிந்துரையில் தான் எக்ஸ் நிறுவனம் முடக்கி உள்ளதாக தகவல்கள் பரவின.
ஆனால் இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு முற்றிலுமாக மறுத்துள்ளது. இதுதொடர்பாக மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில், ‛‛ராய்ட்டர்ஸ் எக்ஸ் வலைதள பக்கம் நம் நாட்டில் முடங்கி இருப்பதற்கு ஏதாவது தொழில்நுட்ப பிரச்சனை அல்லது வலைதளத்தில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக இருக்கலாம்.
ஏனென்றால் . ராய்ட்டர்ஸ் கணக்கை முடக்க அரசு எக்ஸிடம் கேட்கவில்லை. ஏன் அவர்கள் அவ்வாறு செய்தார்கள் என்று எக்ஸிடம் கேட்டுள்ளோம். ராய்ட்டர்ஸின் பல கணக்குகள் இன்னும் இந்தியாவில் உள்ளன. இதன் மூலம் ராய்ட்டர்ஸ் இந்தியாவில் இருக்க வேண்டும் என்று அரசு விரும்புவது தெரிகிறது. இது எக்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப சிக்கலாகவோ அல்லது குழப்பமாகவோ இருக்கலாம்'' என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் நம் நாட்டில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் மெயின் பக்கம் தான் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. மற்றபடி நம் நாட்டில் ராய்ட்டர்ஸ் சீனா, ராய்ட்டர்ஸ் ஆசியா, ராய்ட்டர்ஸ் அறிவியல் செய்தி, ராய்ட்டர்ஸ் பிசினஸ் உள்ளிட்ட மற்ற எக்ஸ் பக்கங்கள் வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றன.
-
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
அந்த 3 கேள்விகள்! பதில் சொல்ல கூட முடியாமல் திணறல்! Starlink சேவையை இந்தியாவில் தொடங்குவதில் சிக்கல் -
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 8வது ஊதியக்குழு வந்தால்.. பண மழை! எவ்வளவு கிடைக்கும்னு பாருங்க -
இந்தியா மிஸ் செய்த பொக்கிஷம்.. இப்போ அமெரிக்காவே அலறுதே! கேம் சேஞ்சர் மிக்-35












Click it and Unblock the Notifications