வொர்க் லைப் பேலன்ஸ்.. மார்க்சிஸ்ட் எம்பி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த முக்கிய மசோதா!
டெல்லி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஏ.ஏ. ரஹீம், ஊழியர்களின் பணி-வாழ்க்கை சமநிலையை மேம்படுத்த 'தொடர்பு துண்டிப்பு உரிமை மசோதா' என்ற முக்கியமான தனிநபர் மசோதாவை நேற்று தாக்கல் செய்திருந்தார்.
வேலை முடிந்த பின்னரும், மேனேஜர் போன் செய்த பணி ரீதியான பேசுவது, வேலை நேரம் முடிந்த பின்னரும் கூடுதல் நேரம் பணி செய்ய சொல்வது, அதற்கான எந்த ஊதியமும் வழங்காமல் இருப்பது போன்ற பிரச்சனை அதிகரித்து வருகிறது. இதனால் ஐடி ஊழியர்கள், 'Right to Disconnect' எனும் இயக்கத்தை முன்னெடுத்து வருகிறார்கள். இப்படி இருக்கையில், ரஹீம் தாக்கல் செய்திருக்கும் மசோதா கவனம் பெற்றிருக்கிறது.

மசோதாவின் நோக்கம் என்ன?
அலுவலக வேலை நேரம் முடிந்த பிறகு, ஊழியர்கள் தங்களது பணி தொடர்பான மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள் அல்லது தொலைபேசி அழைப்புகளுக்குப் பதிலளிக்காமல் இருக்கும் சட்டப்பூர்வ உரிமையை இந்த மசோதா வழங்குகிறது. எப்போதும் ஆன்லைனில் இருக்கும் கலாச்சாரத்தால் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைப்பதே இதன் இலக்கு.
வேலை நேரத்திற்குப் பிறகு அழைப்புகளைப் புறக்கணிக்கும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதோ, அவர்களின் ஊதிய உயர்வு அல்லது பதவி உயர்வைத் தடுப்பதோ சட்டப்படி குற்றமாகும்.
வேலை நேரம்
நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுடன் ஆலோசித்து ஒரு முறையான 'தொடர்பு துண்டிப்பு கொள்கையை' உருவாக்க வேண்டும். அதில் வேலை நேரம் மற்றும் அவசர கால நெறிமுறைகள் தெளிவாக இருக்க வேண்டும். குறிப்பாக ஐடி (IT) மற்றும் சேவைத் துறைகளில் உள்ள இளைஞர்கள் மற்றும் பெண்கள் இந்த கூடுதல் வேலைப்பளுவால் அதிகம் பாதிக்கப்படுவதாக ரஹீம் சுட்டிக்காட்டியுள்ளார்.
மற்ற நாடுகளில் சட்டம் எப்படி இருக்கிறது?
பணியாளர்களின் தனிப்பட்ட நேரம், மன ஓய்வு மற்றும் புத்துணர்ச்சி பெறும் உரிமையை இந்த மசோதா முறையாக அங்கீகரிக்கிறது. 50க்கும் அதிகமான ஊழியர்கள் கொண்ட நிறுவனங்கள், பணி நேரத்திற்குப் பிறகு டிஜிட்டல் தொடர்புகளை புறக்கணிக்க ஊழியர்களுக்கு உதவும் கொள்கைகளை வகுக்க வேண்டும் என பிரெஞ்சு பாராளுமன்றம் 2017 இல் சட்டம் இயற்றியது.
இச்சட்டம் ஊழியர்கள் பழிவாங்கும் பயமின்றி துண்டித்துக் கொள்ள அனுமதிக்கிறது. பெல்ஜியம், போர்ச்சுகல் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளும் இதேபோன்ற சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன.
மன ஆரோக்கியம்
ரஹீமின் மசோதா, முதலாளிகள் மீது சில சட்டப்பூர்வ கடமைகளை சுமத்துகிறது. நிறுவனங்கள், ஊழியர் பிரதிநிதிகள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களுடன் கலந்தாலோசித்து, ஒரு விரிவான 'பணி துண்டிப்பு உரிமை' கொள்கையை உருவாக்க வேண்டும். வேலை நேரம், பணி நேரத்திற்குப் பிந்தைய தகவல்தொடர்பு விதிகள், அவசரகால நடைமுறைகள், குறைதீர்க்கும் வழிமுறைகள் மற்றும் பணியிடத்தில் டிஜிட்டல் நல்வாழ்வு, மன ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் போன்ற அம்சங்களை அக்கொள்கை வரையறுக்கும்.
கோவிட் 19 தொற்றுக்கு பிந்தைய காலத்தில், தொலைதூர பணி முறைகள் அதிகரித்துள்ளன. இப்படி இருக்கையில் இச்சட்டம் மிகவும் பொருத்தமானது என்றார் ரஹீம்.
சட்ட ரீதியான கட்டமைப்பு
"இந்திய ஊழியர்களிடையே பணி நேரத்திற்கு வெளியே, குறிப்பாக இளம் பணியாளர்கள் மற்றும் பெண்களிடையே பணி தொடர்பான மன அழுத்தம் மிக அதிகமாக இருப்பதை ஆய்வுகள் தொடர்ந்து காட்டுகின்றன" என்று அவர் குறிப்பிட்டார். தற்போது இந்தியாவில், இத்தகைய பிரச்சனைகளைக் கையாள சட்டரீதியான கட்டமைப்பு எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications