1950ஐ விட மோசமான நிலைக்கு சென்ற இந்தியா! வெளியான ஷாக் ரிப்போர்ட்.. பிரச்சனைக்கு இதுதான் காரணம்!
டெல்லி: இந்தியாவில் அதானி, அம்பானி, டாடா, பிர்லா, பார்தி மிட்டல் என ஒரு சிலருக்கு மட்டும் அதிக வருமானமும், மறுபுறம் நம்மை போன்ற சாதாரண மக்களுக்கு குறைந்த அளவு வருமானமும் இருப்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் இந்த வருமான சமத்துவமின்மை (income inequality) கடந்த 1950ல் இருந்ததை விட தற்போது மோசமடைந்துள்ளது என ஆய்வுகள் கூறுகின்றன.
இந்தியாவின் நுகர்வோர் பொருளாதாரம் பற்றிய மக்கள் ஆராய்ச்சி (PRICE) மற்றும் நேஷனல் கவுன்சில் ஆஃப் அப்ளைடு எகனாமிக் ரிசர்ச் ஆகிய அமைப்புகள் இணைந்து இதற்கான ஆய்வை மேற்கொண்டிருந்தன. ஆய்வின் முடிவில் இந்தியாவில் எல்லோருக்கும் சமமான வருமானம் கிடைக்கப்படுவதில்லை என்பதும், இந்த நிலை முன்னெப்போதை விடவும் இப்போது மோசமடைந்திருப்பதாகவும் தெரியவந்திருக்கிறது.

வருமான சமத்துவமின்மை (income inequality) என்றால் என்ன?:
இதை புரிந்துக்கொள்வது ரொம்ப சிம்பிள். நீங்களும், நானும், நம்முடைய நண்பர்களும், உறவினர்களும் எல்லோருமே ஒரு நாளைக்கு குறைந்தது 9 மணி நேரம் முதல் அதிகபட்சமாக 12 மணி நேரம் வரை வேலை செய்கிறோம். வங்கி ஊழியராக, அரசு ஊழியராக, கூலி தொழிலாளியாக, ஒப்பந்த ஊழியராக, தனியார் ஊழியராக, சுய தொழில் செய்பவராக நம்மில் பலர் இருக்கிறோம். எல்லோரும் வேலை செய்யும் நேரம் ஒன்றுதான். ஆனால் ஏன் எல்லோருக்கும் ஊதியம் சமமாக வருவதில்லை?
சிலருக்கு மாதம் ரூ.10,000 சம்பளம் வரலாம், சிலர் ரூ.35,000 சம்பளம் பெறலாம். இன்னும் சிலர் ரூ.50,000 வரை கூட சம்பாதிக்கலாம். இந்த சம்பளத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் பிரச்சனையில்லை. இதெல்லாம் ரொம்ப சிறுசு. ஆனால் வேறு சிலர் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் வரை சம்பாதிக்கிறார்கள். அது எப்படி சாத்தியமாகும்? அவருக்கு மட்டும் என்ன 4 கைகள், 8 கால்களா இருக்கிறது? இதைத்தான் வருமான சமத்துவமின்மை என்று அழைக்கிறோம்.
என்ன பிரச்சனை?:
சரிங்க இப்போ அதனால என்ன பிரச்சனை? என்று உங்களுக்கு தோன்றலாம். பிரச்சனை இருக்கு. சிலர் தேவையை விட அதிகமாகவும், பலருக்கு அன்றாட தேவைகளுக்கு கூட போதுமானதாகவும் வருமானம் கிடைக்காததால் வறுமை அதிகரிக்கிறது. வறுமைகள்தான் குற்றங்களை உருவாக்குகிறது. வறுமைதான் வன்முறையை உருவாக்குகிறது, ஆரோக்கியமற்ற போட்டியும், பொறாமையும் இப்படித்தான் பிறக்கிறது.
நோய்களால் பாதிக்கப்படுபவர்கள் சிகிச்சை பெற்றுக்கொள்ள போதுமான பணம் கிடைப்பதில்லை, படிக்க பணம் இல்லை, சுயமரியாதையுடன் வாழ்வதற்கு பணம் இல்லை. இது எல்லாத்துக்கும் வருமான சமத்துவமின்மைதான் காரணம்.
ஆய்வு என்ன சொல்கிறது?:
வருமான சமத்துவம் குறித்து விளக்குவதற்கு 'ஜீனி'(Gini ratio) குறியீடு பயன்படுத்தப்படுகிறது. இந்த குறியீட்டின்படி '0' இருந்தால், எல்லோருக்கும் சமமான வருமானம் கிடைக்கிறது என்று அர்த்தம். இதுவே '1' என இருந்தால், யாருக்குமே சரியான சமமான வருமானம் கிடைக்கவில்லை என்று அர்த்தம். அதாவது வருமான சமத்துவமின்மை உச்சத்தில் இருக்கிறது என்று அர்த்தம்.
இந்தியாவில் கடந்த 1950ம் ஆண்டு ஜீனி குறியீடு 0.371 என இருந்தது. இந்த 75 ஆண்டுகளில் நாடு சரியான பாதையில் சென்றிருந்தால் இந்த குறியீடு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துக்கொண்டே வந்திருக்க வேண்டும். ஆனால் 2023ம் ஆண்டின்படி இந்த குறியீடு 0.410 ஆக உயர்ந்திருக்கிறது.
என்ன செய்ய வேண்டும்?:
பக்கத்தில் இருக்கும் சீனாவை விட இந்தியா மிக மோசமாக பின் தங்கி இருப்பதற்கு காரணம் இதுதான். பிரச்சனையை சரி செய்ய மக்கள் கைகளில் பண புழக்கத்தை அதிகரிக்க வேண்டும். குறிப்பாக கிராமபுறங்களில் இதை செய்ய வேண்டும். பணம் இருந்தால் மக்கள் பொருட்களை வாங்குவார்கள். பொருட்கள் உற்பத்தி அதிகரிக்கும், இது வேலை வாய்ப்பை ஏற்படுத்தும். இதனால் பொருளாதாரம் உயர வாய்ப்பு இருக்கிறது.
100 நாட்கள் வேலை என்று சொல்லப்படும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் உள்ளிட்டவை இந்த நோக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்டதுதான்.
நீங்கள் சொல்லுங்கள் மக்களே.. உங்களுக்கும் உங்கள் முதலாளிக்கும் என்ன சம்பள வித்தியாசம்?
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ












Click it and Unblock the Notifications