கொரோனாவை விட மோசமானது சாலை விபத்து.. தமிழகமே தி பெஸ்ட் - அமைச்சர் கட்கரி
டெல்லி: நாட்டில் நிகழும் சாலை விபத்துகள் 'கோவிட் -19 தொற்றை விட மிகவும் தீவிரமானது' என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 5 லட்சம் சாலை விபத்துகள் நிகழ்கின்றன. இவற்றில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். சுமார் மூன்றரை லட்சம் பேர் காயமடைகின்றனர்.
இவ்வாறு, சாலை விபத்துகளில் நேரிடும் உயிரிழப்புகளால் மட்டும் நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 3.14 சதவீதம் இழப்பு ஏற்படுகிறது.

கோவிட் விட தீவிரமானது
இதுகுறித்து சர்வதேச சாலை கூட்டமைப்பின் கூட்டத்தில் பேசிய அமைச்சர் நிதின் கட்கரி, "விபத்துகளால் எழுபது சதவிகித இறப்புகள் 18 முதல் 45 வயதுக்குட்பட்டோரிடையே நிகழ்கின்றன. இந்தியாவில் சாலை விபத்துக்களில் ஒரு நாளைக்கு 415 பேர் இறக்கின்றனர். இந்த சூழ்நிலை கோவிட் -19 தொற்றுநோயை விட மிகவும் தீவிரமானது என்று நான் கூறுவேன், இது ஆண்டுதோறும் எங்களுக்கு ஆபத்தான சூழ்நிலையாக மாறி வருகிறது.

தீவிரமாக உள்ளேன்
துரதிர்ஷ்டவசமாக, உலகில் அதிகம் சாலை விபத்துக்கள் நிகழும் நாடுகளில் நாம் முதலிடத்தில் உள்ளோம். இது அமெரிக்கா மற்றும் சீனாவை விட அதிகம். ஒரு போக்குவரத்து அமைச்சராக இந்த விஷயத்தில் நான் தீவிரமாகவும் இருக்கிறேன்.

வீடுகளில் முடக்கம்
உலகளவில் அதிக சாலை விபத்துக்கள் இந்தியாவில் நிகழ்கின்றன. இதனால், ஆண்டுதோறும் 1.5 லட்சம் பேர் கொல்லப்படுகிறார்கள். குறிப்பாக உறுப்புகளை இழந்து 3.5 லட்சத்திற்கும் அதிகமானோர் முடங்கிக் கிடக்கின்றனர்.

தமிழகமே முன்மாதிரி
தமிழகம் சாலை விபத்துக்களை 38 சதவீதமும், இறப்புகளை 54 சதவீதமும் குறைக்கும் போது, மற்ற மாநிலங்கள் ஏன் சாலை பாதுகாப்பில் பின்தங்கியுள்ளன என்று ஆச்சர்யமாக உள்ளது. அனைத்து மாநிலங்களும் தமிழக மாதிரியைப் பின்பற்றுமாறு வலியுறுத்தியுள்ளோம். தரமான, விரிவான மற்றும் சீரான விபத்து தரவு சேகரிப்பு மற்றும் பதிவுசெய்தலின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

டிஜிட்டல் தொழில்நுட்பம்
இந்தியாவில், சாலை விபத்து மரணங்களில் 78 சதவீதம் இருசக்கர வாகன ஓட்டிகள், சைக்கிள் ஓட்டுபவர்கள், மற்றும் பாதசாரிகளுக்கே நிகழ்கின்றன. டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், ட்ரோன்கள் மற்றும் பயன்பாட்டு அடிப்படையிலான தளங்களை உருவாக்குவது அவசியம்.

மாற்றுத் தீர்வு வேண்டும்
60 சதவீத விபத்துக்கள் road junctions-களில் தான் நிகழ்கின்றன, இது அவற்றின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தில் குறைபாடுகள் இருப்பதை தெளிவாகக் காட்டுகிறது. அப்படியெனில், ரவுண்டானாக்கள், ஃப்ளைஓவர்கள் உள்ளிட்டவற்றை மறுவடிவமைப்பதன் மூலம் விபத்துகளுக்கு நாம் மாற்றுத் தீர்வை கண்டுபிடிக்க வேண்டும்.

சோதனை கட்டாயம்
மேலும், இந்தியாவில் விபத்துகளால் ஏற்படும் இறப்புகளில் 70 சதவீதம் அதிக வேகத்தினால் ஏற்படுவதாகும். அனைத்து வாகனங்களின் தரத்தையும் தானியங்கி வாகன ஆய்வு மற்றும் சான்றிதழ் (ஐ & சி) மையங்கள் மூலம் சோதனை செய்வது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications