அசாத்தியமான நம்பிக்கை. ரேஷன், குடிநீருடன் திரளும் விவசாயிகள்.. அதிர்ச்சியில் டெல்லி போலீஸ்
டெல்லி: பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் டிக்காய்டு கண்ணீர் மல்க விடுத்த வேண்டுகோளுக்கு பிறகு டெல்லியின் காசிப்பூர் எல்லையில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. மிகவும் நம்பிக்கையுடனும், என்ன நடந்தாலும் ஒரு கைபார்க்காமல் போகக்கூடாது என்று விவசாயிகள் போராட்ட களத்திற்கு வந்திருப்பது அவர்களின் பேச்சில் தெரிந்தது.
வேளாண் சட்டத்தை ரத்து செய்யும் வரை போராட்டம் நடத்துவது என உத்தரப்பிரதேசத்தின் முசாபர்நகர் மகாபஞ்சாயத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி பல்லாயிரம் விவசாயிகள் காசிப்பூர் பாராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். உத்தரபிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களை கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் காசிபூர் போராட்ட களத்திற்கு டிராக்டர்கள் மற்றும் லாரிகளில் ரேஷன் மற்றும் தண்ணீர் பாட்டில்களை கொண்டு வந்து வழங்கியதுடன் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
மூன்று நண்பர்களுடன் டெல்லி-உ.பி. எல்லைக்கு போராட காசிப்பூரைச் சேர்ந்த சுபோத் குமார் என்ற விவசாயி, வழியில் டார்ப் மற்றும் கம்பிகளை வாங்கி டெல்லி எல்லையில் உள்ள ஃப்ளைஓவர் அருகே கூடாரம் அமைத்தார். இதுபற்றி அவர் கூறும் போது, "நாங்கள் இங்கே தங்க இருக்கிறோம். எனது மனைவியும் குழந்தைகளும் இப்போது விவசாயத்தை கவனித்து வருகின்றனர்.

அரிசி
டிவியில் ராகேஷ் டிக்காய்டு அழுவதைக் கண்டதும் என் மனைவி அழுதாள். காவல்துறையினரால் டிக்காய்டை கைது செய்ய முடியாது, அவர் எந்த தவறும் செய்யவில்லை. என்னிடம் சில காய்கறிகளும் அரிசியும் உள்ளன... நான் அதை இங்கு சமைத்து விவசாயிகளுக்கு தானம் செய்வேன். சாலைகளை சுத்தம் செய்வதன் மூலம் விவசாயிகளுக்கு சேவை செய்வேன்" என்றார்.

எல்லோருக்கு சமைப்பேன்
காசிப்பூர் எல்லையில் போராடும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்த காரணத்தால். , பி.கே.யு மற்றும் ராஷ்டிரிய லோக் தளம் (ஆர்.எல்.டி) அமைப்பினரும், விவசாயிகளுக்கு தண்ணீர் மற்றும் உணவை அனுப்பி வைத்து வருகிறார்கள். என்.எச் -24 தேசிய நெடுஞ்சாலையில் ஒட்டல் ஒன்றை நடத்தி வரும் பி.கே.யுவின் உறுப்பினர் தேஷ்பால் சிங், "முன்னதாக, நாங்கள் 1,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு சமைத்தோம். இப்போது, 3,000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் இருப்பதாக நான் நினைக்கிறேன். எனது குடும்ப உறுப்பினர்களும் போராட்டத்தில் இணைந்துள்ளனர். எல்லோரும் எங்களுக்கு ரேஷன் தருகிறார்கள், மேலும் உணவு தயாரிக்க ஷாம்லியில் இருந்து மேலும் இரண்டு சமையல்காரர்களை அழைத்தோம் வந்துள்ளார்கள். ஒவ்வொரு வாகனத்திலும் 5,000 நீர் கேன்களுடன் தனது சகோதரர்கள் பாக்பத் மற்றும் ஷாம்லியில் இருந்து தினமும் ஐந்து டிராக்டர்களை அனுப்புகிறார்கள். "இங்கு தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. டெல்லி அரசாங்கம் தண்ணீர் கொடுத்து உதவுகிறது, ஆனால் இப்போது எங்களுடன் அதிகமானோர் உள்ளார்கள் அவர்களுக்கு தண்ணீர் தேவை. என்றார் தேஷ்பால் சிங்.

சாலைக்கு சீல்
இதனிடயே ஆர்.எல்.டி விவசாய அமைப்பினர், முசாபர்நகர் மற்றும் அருகிலுள்ள கிராமங்களிலிருந்தும் விவசாயிகளுக்க காய்கறிகளை அனுப்பிவருகிறார்கள்.'
டெல்லி காவல்துறையும் உ.பி. போலீசாரும் எல்லைக்குச் செல்லும் கிட்டத்தட்ட நான்கு வழித்தடங்களுக்கு சீல் வைத்து விட்டது. இதனால் விவசாயிகள் அம்ரோஹா-காஜியாபாத் சாலை அல்லது காசியாபாத்தில் உள்ள மோகன் நகர் வழியாக போராட்ட களத்திற்கு வந்து உணவு, தண்ணீரை தருகிறார்கள். வரும் வழியில் மூன்று அடுக்கு தடுப்புகள் உள்ளது. அதையும் தாண்டித்தான் விவசாயிகள் வருகிறார்கள்.

தடுக்க முடியாது
சனிக்கிழமை பிற்பகலுக்குள், மேம்பாலத்தை ஒட்டிய சாலைகள் விவசாயிகள் மற்றும் கூடாரங்களால் நிரம்பியிருந்தன. விவசாய சங்க தலைவர் டிக்கைட்டுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பிய விவசாயிகள், தங்கள் உறவினர்களையும் நண்பர்களையும் எல்லைக்கு அழைத்துள்ளதாக தெரிவித்தனர். "டிக்கைட் சஹாப் மீண்டும் அழுவதை நாங்கள் விரும்பவில்லை. போலீசார் தொடர்ந்து எங்களைத் துன்புறுத்துவார்கள்; அவர்கள் கிட்டத்தட்ட எல்லா வழிகளையும் தடுத்துள்ளனர், ஆனால் ஒரு வருடம் இங்கு எதிர்ப்பு தெரிவிக்கத் தயாராக இருக்கும் விவசாயிகளை அவர்களால் தடுக்க முடியாது. எனது நண்பர்களிடம் வந்து போராட்டத்தில் சேர சொன்னேன். எங்கள் பண்ணைகளை கவனித்துக்கொள்வதற்காக வாராந்திர பயணங்களை மேற்கொள்வோம், அல்லது எங்கள் மனைவிகளும் குழந்தைகளும் அங்கேயே இருப்பார்கள். இப்போதைக்கு, இங்கு போராட எங்களுக்கு அதிகமான மக்கள் தேவை "என்று ஷாம்லியைச் சேர்ந்த விவசாயி ராகேஷ் கௌதம் கூறினார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications