ஆர்வக் கோளாறில் செல்பி.. இந்தியக் கொடிக்கு பதிலாக பராகுவே கொடியை பயன்படுத்தி சர்ச்சை கிளப்பிய வதேரா
டெல்லி: நாடாளுமன்றத்திற்கான 6-ஆவது கட்ட தேர்தலில் வாக்களித்த கையோடு பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா வெளியிட்ட புகைப்படத்தில் இந்திய கொடிக்கு பதிலாக முதலில் பராகுவே நாட்டின் கொடியை பயன்படுத்திவிட்டு பின்னர் இந்திய கொடியை அவர் பயன்படுத்தியுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
டெல்லி, பீகார், உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு நேற்றைய தினம் 6-ஆவது கட்ட தேர்தல் நடைபெற்றது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்களும் பிரபலங்களும் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
டெல்லியில் லோதி எஸ்டேட்டில் சர்தார் பட்டேல் வித்யாலயா பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடியில் கணவர் ராபர்ட் வதேராவுடன் பிரியங்கா காந்தி நேற்று வாக்களித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி இந்த தேர்தல் மிகவும் முக்கியமானது. ஏனென்றால் நம் நாட்டிற்காக ஜனநாயகத்தை காக்க நாம் போராடி வருகிறோம். அதை மனதில் கொண்டு நான் வாக்களித்தேன் என கூறினார்.

நமது பலம்
இதையடுத்து வாக்களித்த பிறகு மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கைவிரல் மையுடன் செல்பி புகைப்படத்தை டுவிட்டரில் ராபர்ட் வதேரா வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறுகையில் நமது உரிமையே நமது பலம்.

நாட்டின் கொடி
அனைவரும் வாக்களிக்க வேண்டும். நம் நாட்டின் மதசார்பின்மை, பாதுகாப்பு, ஆக்கப்பூர்வமான எதிர்காலம் ஆகியவற்றை ஏற்படுத்த எங்களுக்கு வாக்களியுங்கள் என குறிப்பிட்டிருந்தார். கூடவே ஆர்வக் கோளாறில் இந்திய கொடிக்கு பதிலாக பராகுவே நாட்டின் கொடியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

வதேரா
இந்திய கொடியில் காவி நிறம், வெள்ளை, பச்சை ஆகிய நிறத்தின் நடுவே அசோக சக்கரம் இருக்கும். பராகுவே நாட்டின் கொடியில் சிகப்பு, வெள்ளை, நீல நிறம் இடம் இருக்கும். இந்த கொடியைதான் வதேரா பயன்படுத்தியிருந்தார்.
|
இந்திய கொடி
பின்னர் தனது தவற்றை உணர்ந்த அவர் உடனடியாக அந்த கொடியை மாற்றிவிட்டு இந்திய கொடியை பயன்படுத்தியுள்ளார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications