சினிமா பாணியில் சுட்டுக்கொலை.. கர்னி சேனா தலைவர் கொலைக்கு பொறுப்பேற்ற ரோகித் கோத்ரா.. யார் தெரியுமா?
ஜெய்பூர்: ராஜ்புத் கர்னி சேனா தலைவர் சுக்தேவ் சிங் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டதற்கு ராஜஸ்தானை சேர்ந்த ரோகித் கோத்ரா பொறுப்பேற்றுள்ளார். அவர் யார்? அவரது பின்னணி என்ன? என்பனவற்றை இங்கே காணலாம்.
ராஜஸ்தானில் ராஜ்புத் கர்னி சேனா அமைப்பின் தலைவராக இருந்து வந்தவர் சுக்தேவ் சிங் சோகமெடி. தீவிர வலது சாரி அமைப்பாக ராஜ்புத் கர்னி சேனா அமைப்பு பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூரில் உள்ள ஷியாம் நகரில் சுக்தேவ் சிங்கின் வீடு உள்ளது. இவருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சுக்தேவ் சிங் வழக்கம் போல தனது வீட்டில் இருந்தார். அப்போது திடீரென அவரது வீட்டை நோக்கி பைக்கில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் வீட்டிற்குள் புகுந்து சுக்தேவ் சிங் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில், சுக்தேவ் சிங் படுகாயம் அடைந்து உயிரிழந்தார். ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை இந்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.
கொலைக்கு பொறுப்பேற்பு: வலது சாரி அமைப்பை சேர்ந்த சுக்தேவ் சிங் பட்ட பகலில் வீடு புகுந்து துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சுக்தேவ் சிங் துப்பாக்கியால் சுடப்பட்ட சிசிடிவி வீடியோ காட்சிகளும் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றியது யார் என்பது குறித்து போலீசார் ஒருபுறம் விசாரணை நடத்தி வர, இந்த சம்பவத்திற்கு பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் தொடர்புடைய கேங்ஸ்டர் அமைப்பான லாரன்ஸ் பிஷ்னோய் குழுவை சேர்ந்த ரோகித் கோத்ரா என்ற ரவுடி என்று தெரியவந்துள்ளது.
யார் இவர்?: மேலும், கர்னி சேனா தலைவர் சுக்தேவ் சிங் கொகாமுடி தலைவர் கொலைக்கு ரோகித் கோத்ரா பொறுப்பேற்றுள்ளார். சுக்தேவ் சிங் கொலை செய்யப்பட்ட சில மணி நேரத்தில் தனது பேஸ்புக்கில் இந்த கொலைக்கு பொறுப்பேற்பதாக ராஜஸ்தானை சேர்ந்த ரோகித் கோத்ரா பதிவு செய்து இருந்தார். சினிமா பாணியில் நடைபெற்ற இந்த கொலை தொடர்பான வீடியோ வெளியாகி பதைபதைக்க வைத்தது.
நெஞ்சை உறைய வைக்கும் வகையில், சினிமா பாணியில் பட்ட பகலில் நடந்த இந்த கொலைக்கு பொறுப்பேற்ற ரோகித் கோத்ரா யார் என்ற விவரங்களை பார்க்கலாம். ராஜஸ்தான் மாநிலம் பைக்னர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரோகித் கோத்ரா.. கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் ரோகித் கோத்ரா மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. நிழல் உலக வேலைகளில் ஈடுபடுபவராக அறியப்படுவர்.
நான் தான் செய்தேன்: ரோகித் கோத்ராவுக்கு எதிராக 32 க்கும் மேற்பட்ட தீவிர குற்றங்கள் நிலுவையில் உள்ளன. மிரட்டி பணம் பறிப்பதை வாடிக்கையாக கொண்ட ரோகித் கோத்ரா, ராஜஸ்தானில் பல தொழில் அதிபர்களிடம் ரூ.5 கோடி முதல் 17 கோடி வரை பணம் கேட்டு மிரட்டியதாக சொல்லப்படுகிறது.
ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தில் கடந்த ஆண்டு கொல்லப்பட்ட கேங்ஸ்டர் ராஜு தேத் கொலைக்கு ரோகித் கோத்ராதான் திட்டம் வகுத்ததாக அவர் மீது குற்றச்சாட்டுள்ளது. இந்தக் கொலையை தானே நடத்தியதாக ரோகித் கோத்ராவே தனது பேஸ்புக் பதிவில் அறிவித்தார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications