டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மாரியப்பன் தங்கவேல்...ரோஹித் சர்மா...கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை!!

Google Oneindia Tamil News

டெல்லி: பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன், கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா, குத்துச் சண்டை வீரர் விக்னேஷ் போகட், டேபிள் டென்னிஸ் சாம்பியன் மணிகா பத்ரா ஆகியோரின் பெயர்கள் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    Rohit Sharma, Mariyappan recommends for the Rajiv Gandhi Khel Ratna

    தேசிய விளையாட்டு விருதுக்கான தேர்வு கமிட்டி கடந்த செவ்வாய் கிழமை ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, அர்ஜீனா விருதுக்கு விளையாட்டு வீரர்களை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டத்தை கூட்டி இருந்தது. இதையடுத்து இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன் முறையாக நான்கு விளையாட்டு வீரர்கள் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

    Rohit Sharma, Mariyappan Thangavelu recommends for the Rajiv Gandhi Khel Ratna Award

    ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது ஏற்கனவே சச்சின் டெண்டுல்கர், எம்எஸ் தோனி, விராட் கோலி ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. 1998 ஆம் ஆண்டில் முதன் முறையாக சச்சின் டெண்டுல்கருக்கும், 2007 ஆம் ஆண்டில் எம்எஸ் தோனிக்கும், 2018 ஆம் ஆண்டில் விராட் கோலிக்கும் இந்த விருது வழங்கப்பட்டது.

    சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது.. ஸ்டெர்லைட் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது.. ஸ்டெர்லைட் நிறுவனம்

    ஆசிய விளையாட்டுப் போட்டியில் 2018 ஆம் ஆண்டில் கலந்து கொண்டு நாட்டின் முதல் பெண் மல்யுத்த வீரர் வினேஷ் போகட் தங்கப் பதக்கம் வென்று இருந்தார். இதேபோல், அதே ஆண்டில், காமன்வெல்த் மற்றும் ஆசியன் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு மணிகா பத்ரா தங்கம் மற்றும் வெண்கலம் வென்று இருந்தார்.

    மாற்றுத் திறனாளிகளுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்று இருந்தார். 2019 ஆம் ஆண்டில், கேல் ரத்னா விருதை மாற்றுத் திறனாளி வீராங்கனை தீபா மாலிக் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா வென்று இருந்தனர்.

    English summary
    Rohit Sharma, Mariyappan Thangavelu recommends for the Rajiv Gandhi Khel Ratna Award
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X