பைக்கே போகுது.. காலை வாரிய ரோல்ஸ் ராய்ஸ்.. கட்டி இழுத்துட்டுதான் போகணும்.. கலாய்த்த நெட்டிசன்ஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் சாலைகளில் குளம் போல தண்ணீர் தேங்கியுள்ளன. மழை நீரில் பல கார்களும் சீறிப்பாய்ந்து செல்லும் நிலையில், பல கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கார் பழுதாகி நடுவழியில் நின்றது. இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது. பைக்கு கூட போகுது ஆனால்.. என நெட்டிசன்கள் தங்களுக்கே உரிய பாணியில் கலாய்த்து வருகிறார்கள்.

டெல்லியில் கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்குகிறது. இதனால், சாலைகளிலும் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கின்றன. எப்போதும் பரபரப்பாக காட்சி அளிக்கும் சாலைகளில் கூட தண்ணீர் தேங்கி நின்றது. இந்த நிலையில் தான், சுமார் 5 கோடி மதிப்பு கொண்ட ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார் ஒன்று தண்ணீர் தேங்கிய சாலை ஒன்றில் பழுதாகி நிற்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Rolls Royce Car trend weird

பழுதாகி நின்ற ரோல்ஸ் ராய்ஸ்: பிற வாகனங்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக மழை நீரை சிதறவிட்டபடி சென்று கொண்டிருக்க ரோல்ஸ் ராய்ஸ் கார் பழுதாகி நின்ற காட்சிகளை பார்த்த நெட்டிசன்கள் கலாய்க்கும் விதமாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இன்ஸ்டகிராமில் நெட்டிசன் ஒருவர் இந்த காட்சிகளை பகிர்ந்து, காரின் விலை முக்கியம் இல்லை.

நாம் விரும்பும் நேரத்தில் செல்ல வேண்டும் அதுதான் முக்கியம். ரோல்ஸ் ராய்ஸ் கார் பழுதாகி நிற்பதை பார்ப்பது வருத்தம் அளிக்கிறது. இதில் இன்னொரு வருத்தப்பட விஷயம் என்னவென்றால் டெல்லியின் உள்கட்டமைப்பு எவ்வாறு உள்ளது என்பதுதான்” என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

பரவும் வீடியோ: ரோல்ஸ் ராய்ஸ் காருடன் மேலும் சில இரு சக்கர வாகனங்களும் பழுதாகி நிற்கின்றன. அதேவேளையில் பல வாகனங்கள் வெள்ள நீரில் ஊர்ந்தபடி சென்று கொண்டிருக்கின்றன. அந்த வழியாக சென்ற மாருது சுசுகி காரில் சென்ற வாகன ஓட்டி ஒருவர் ரோல்ஸ் ராய்ஸ் கார் பழுதாகி நிற்கும் காட்சிகளை வீடியோ எடுத்து இருக்கிறார்.


நெட்டிசன்கள் கலாய்: நெட்டிசன்கள் பலரும் மகிந்திரா தார், இந்த காரை இழுத்து செல்ல வந்து கொண்டிருக்கிறது என ஸ்மைலியுடன் பதிவிட்டு இருக்கிறார்கள். அதேபோல மற்றொரு நெட்டிசன் கூறுகையில், இந்த சொகுசு கார்களுக்கு எவ்வளவு தண்ணீரில் ஓடும் என்ற ஸ்டார் ரேட்டிங்கும் தேவை.. மலிவான கார்களுக்கு இந்த தண்ணீர் எல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை என்று கூறியுள்ளார்.

காரின் விலை எவ்வளவு?: உலக அளவில் மிகவும் மதிப்பு மிக்க கார்களில் ஒன்றாக ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் உள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் ஆன இந்த காரின் விலை 6.95 கோடியில் இருந்து 7.5 கோடி வரை இருக்கும். 360 டிகிரி கேமரா, எலக்ட்ரிக் டோர்கள் என ஏகப்பட்ட சொகுசு வசதிகள் இந்த காரில் உள்ளன.

இந்தியாவில் பெரும் கோடீஸ்வர்கள், பிரபலங்கள் என ஒரு சிலரே இந்த காரை வைத்து இருக்கிறார்கள். மிகவும் காஸ்ட்லியான காராக அறியப்படும் ரோல்ஸ் ராய்ஸ் கார் இப்படி சிறிய மழைக்கே காலை வாரி விட்டிருக்கிறது.. இவ்வளவு விலை கொடுத்து என்ன யூஸ் என்று கலாய்க்கும் விதமாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+