21 கிமீ பயணம்..ரூ.1,525 கட்டணம் வசூல்..ஷாக் ஆகிப்போன பெண் பயணி..உபேர் அளித்த விளக்கம் என்ன தெரியுமா?
உபேர் நிறுவனம் மூலம் கேப் புக் செய்து 21 கி.மீட்டர் மட்டுமே பயணத்தை மேற்கொண்ட பயணிக்கு வாடகை கட்டணமாக ரூ.1,525 வசூல் செய்யப்பட்டுள்ளது.
டெல்லி: டெல்லியை சேர்ந்த பெண் பயணி ஒருவர் உபேர் நிறுவனத்தின் மூலமாக கேப் புக் செய்து பயணித்து இருக்கிறார். 21 கி.மீட்டர் மட்டுமே பயணத்தை மேற்கொண்ட அவருக்கு வாடகை கட்டணமாக ரூ.1,525 வசூலிக்கப்பட்டதால் பில் தொகையை பார்த்து அந்த பயணி ஷாக் ஆகியுள்ளார். இது தொடர்பாக உபேர் நிறுவனமும் பெண் பயணியிடம் உரிய பதிலை அளித்துள்ளது.
டெல்லி, மும்பை, சென்னை போன்ற பெருநகரங்களில் வாடகை கார் நிறுவனங்கள் அதிக அளவில் இயங்கி வருகின்றன.
பொது போக்குவரத்துகளில் கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதாலும் அலுவலகம் செல்லும் பலரும் உபேர் , ஓலா போன்ற ஆன்லைன் நிறுவனங்கள் மூலமாக வாடகை கார்களை புக்கிங் செய்து பயணிப்பதுண்டு.

அதிகப்படியான கட்டணங்கள்
வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள் கூட உள்ளூர் கட்டண விவரங்கள் தெரியாது என்பதாலும் தேவையில்லாமல் பேரம் பேசுவதை தவிர்க்கவும் செயலிகள் மூலமாக புக்கிங் செய்வது பயணிப்பதை விரும்புகிறார்கள். சில நேரங்களில் கட்டணங்கள் அதிகமாக வசூலிக்கப்படுவதாகவும் அவ்வப்போது பயணிகள் இந்த நிறுவனங்கள் மீது முன்வைப்பதும் உண்டு. சில சமயங்களில் இதுபோன்ற அதிகப்படியான கட்டணங்களை ஆன்லைன் நிறுவனங்கள் திருப்பி கூட அளிக்கின்றன. சில நேரங்களில் எதையும் கண்டு கொள்ளாமல் இருந்துவிடும்.

ரூ.1,525 வசூல்
இந்த நிலையில், டெல்லியை சேர்ந்த பெண் பயணி ஒருவர் உபேர் நிறுவனத்தின் மூலமாக கேப் புக் செய்து பயணித்து இருக்கிறார். 21 கி.மீட்டர் மட்டுமே பயணத்தை மேற்கொண்ட அவருக்கு வாடகை கட்டணமாக ரூ.1,525 வசூலிக்கப்பட்டுள்ளது. பில் தொகையை பார்த்ததும் ஒரு நிமிடம் தலை சுற்றிப்போன அந்த பெண் பயணி உடனடியாக உபேர் நிறுவனத்திடம் இது குறித்து முறையிட்டு இருக்கிறார். உடனடியாக உபேர் நிறுவனமும் உரிய பதிலை அளித்துள்ளது.

21 கி.மீட்டர் தூரம் பயணம்
எப்படி இவ்வளவு தொகை வாடகை கட்டணமாக வசூலிக்கப்பட்டது.. உபேர் நிறுவனம் என்ன பதிலை கொடுத்தது என்ற விவரங்களை இங்கே பார்க்கலாம். டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சித்தரன்ஜன் பார்க் பகுதிக்கு கடந்த வியாழக்கிழமை பெண் பயணி ஒருவர் உபேர் மூலமாக கேப் புக் செய்துள்ளார். 21 கி.மீட்டர் தூரம் கொண்ட இடத்திற்கு பில் கட்டணமாக ரூ. 1, 525 வந்துள்ளது. இதனைப்பார்த்து ஷாக் ஆன அந்தப் பயணி கேப் டிரைவரிடம் வாக்குவாதம் எதுவும் செய்யாமல் முழு பணத்தையும் செலுத்தியிருக்கிறார்.

டிராக்கிங் சிஸ்டத்தில் கோளாறு
பிறகு உபேர் நிறுவனத்திடம் இது குறித்து முறையிட்டு இருக்கிறார். உடனே உபேர் நிறுவனம வாடிக்கையாளர் சேவை பிரதிநிதிகளும் அந்த பெண் பயணியை தொடர்பு கொண்டு பேசியிருக்கின்றனர். பிறகு ஜிபிஎஸ் டிராக்கிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்வளவு தொகை வந்து விட்டதாகவும் கூடுதலாக வசூலிக்கப்பட்ட ரூ.900 கட்டணத்தை ரிஃபண்ட் செய்வதாகவும் கூறியுள்ளனர். சிறிது நேரத்தில் உபேர் வாலட்டில் அந்த பணமும் கிரெடிட் ஆகிவிட்டதாம்.

உத்தர பிரதேச எல்லையை தாண்டியதாக
உபேர் நிறுவனம் இது குறித்து கூறுகையில், அந்த பெண் பயணி டெல்லிக்குள் மட்டுமே பயணித்த போதும் தவறுதலாக உத்தர பிரதேச எல்லையை தாண்டியதாக மாநிலங்களுக்கு இடையேயான கட்டணமும் சேர்த்து பில் தொகையில் சேர்க்கப்பட்டுள்ளது. ஜிபிஎஸ் டிராக்கிங்க் சிஸ்டத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த பிரச்சினை எழுந்துள்ளது. இதுபோன்ற பிரச்சினைகள் எழுந்தால் உடனடியாக பணம் திருப்பி அளிக்கப்படுவிடும்" என்று தெரிவித்துள்ளது. உபேர், ஓலா ஆகிய நிறுவனங்கள் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் எழுவது இது முதல் முறை கிடையாது. ஏற்கனவெ இதுபோன்ற பல சர்ச்சைகளில் இந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications