லெட்டர்பேடு கட்சிகளுக்கே இவ்வளவு நிதியா? குஜராத்தில் ரூ.1,700 கோடியை குவித்த சிறிய கட்சிகள்
டெல்லி: குஜராத்தில் பெயரளவிற்கு இயங்கும் ஆறு சிறிய கட்சிகள் மட்டும் கடந்த 2023-24 ஆம் நிதி ஆண்டில் ரூ.1,700 கோடி அளவுக்கு நிதியை திரட்டி உள்ளன. காங்கிரஸ் உள்ளிட்ட ஐந்து தேசிய கட்சிகள் பெற்ற நிதியை விட இந்த தொகை அதிகம் என்பது தெரியவந்துள்ளது.
குஜராத்தில் உள்ள லெட்டர் பேடு கட்சிகள் அதாவது, பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாமல் பெரிய செல்வாக்கு இல்லாமல் இருக்கும் 6 கட்சிகள் மட்டும் ரூ.1,700 கோடி அளவுக்கு நிதி திரட்டி இருக்கின்றன. இதில் ஆம் ஜன்மத் கட்சி மட்டும் 620 கோடி ரூபாய் நிதி திரட்டி உள்ளது. காங்கிரஸ் கட்சியை பெற்ற நிதியை விட இது இருமடங்கு அதிகம் ஆகும்.

நம் நாட்டில் 2,800-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் உள்ளன. இவற்றில் சுமார் 73 கட்சிகள் மட்டுமே தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் பெற்றுள்ளன. இதர கட்சிகள் பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் பெறாத கட்சிகளாக உள்ளன. அரசியல் கட்சிகளை பொறுத்தவரை நிறுவனங்கள், பல்வேறு அமைப்புகளிடம் இருந்து நிதி உதவிகளை பெறுகின்றன. இதில்தான் தற்போது ஒரு அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது குஜராத்தை சேர்ந்த அங்கீகரிக்கப்படாத 6 கட்சிகள் மட்டும் 2023 - 24 ஆம் நிதி ஆண்டில் ம்ட்டும் ரூ.1,700 கோடி ரூபாய் நிதி திரட்டி உள்ளது தெரியவந்துள்ளது. அரசியல் கட்சிகள் பெற்ற நிதி குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்ட ஜனநாயக சீர்திருத்தத்திற்கான சங்கம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் இது தெரியவந்துள்ளது. இதுபற்றிய ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
ரூ.1,480 கோடி திரட்டி உள்ளன
காங்கிரஸ், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசிய மக்கள் கட்சி ஆகிய 5 கட்சிகள் கடந்த 2023-24 ஆம் நிதி ஆண்டில் தேர்தல் நிதியாக நாடு முழுவதும் சுமார் ரூ.1,480 கோடி திரட்டி உள்ளன. அதே நேரத்தில் குஜராத்தில் உள்ள லெட்டர் பேடு கட்சிகள் அதாவது, பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாமல் பெரிய செல்வாக்கு இல்லாமல் இருக்கும் 6 கட்சிகள் மட்டும் ரூ.1,700 கோடி அளவுக்கு நிதி திரட்டி இருக்கின்றன.
கடந்த மக்களவை தேர்தலில் 5 தேசிய கட்சிகள், பெற்ற நிதியை வைத்து 893 வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்தியுள்ள்ன. ஆனால், 1,700 கோடி நிதி திரட்டிய ஆறு குஜராத் கட்சிகள் வெறும் 15 வேட்பாளர்களையே தேர்தலில் போட்டியிட நிறுத்தியுள்ளன. இதில் இன்னொரு அதிர்ச்சிகர தகவல் என்னவென்றால், 4 கட்சிகளின் முகவரிகள் அகமதாபாத்தின் நரோடா என்ற ஒரே பகுதியில் பதிவாகியுள்ளன.
காங்கிரஸ் பெற்றதை விட இது இருமடங்கு அதிகம்
இதில் ஆம் ஜன்மத் கட்சி மட்டும் 620 கோடி ரூபாய் நிதி திரட்டி உள்ளது. காங்கிரஸ் கட்சியை பெற்ற நிதியை விட இது இருமடங்கு அதிகம் ஆகும்" என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல, நாடு முழுவதும் பதிவு மட்டும் செய்துவிட்டு அங்கீகாரம் பெறாமல் இருக்கும் 2,800 கட்சிகளில் சுமார் 73 சதவீத கட்சி தற்போது கணக்கு விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சம்பர்பிப்பதே இல்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தேர்தலில் அக்கறை காட்டாத இத்தகைய சிறிய கட்சிகளுக்கு கோடிக்கணக்கில் நிதி வருவது வரி ஏய்ப்பு மற்றும் சட்ட விரோத பண பரிவர்த்தனை போன்ற சந்தேகங்களை எழுப்புவதாக அமைந்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இத்தனைக்கும், குஜராத் மாநிலம் பிரதமர் மோடியின் மாநிலம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
