"2000 ரூபாய்" பேங்கில் மாத்திட்டீங்களா? ரூ.2000 நோட்டை திரும்பபெறும் ரிசர்வ் வங்கி.. வெளியான மேட்டர்
டெல்லி: 2000 ரூபாயை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்த நிலையில், முக்கிய தகவல் ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.. என்ன அது?
2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்திருந்தது.. இதையடுத்து, இந்த நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்யும் பணியும் துரிதமாக ஆரம்பமானது..

டெபாசிட்கள்: வருகிற செப்டம்பர் 30-ந் தேதி வரை இதற்கான கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.. ஆரம்பத்தில், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் டெபாசிட் செய்யும் பணி குறைவாகவே இருந்தது.. ஆனால், அடுத்தடுத்த நாட்களில் அதிக அளவில் டெபாசிட் செய்யப்படுவதாக கூறப்பட்டன..
இதனிடையே, 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கான கால அவகாசம் வழங்கப்படுமா? என்று சில நாட்களுக்கு முன்பு, மக்களவையில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினார்கள்.. இதற்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்து மூலம் பதிலளித்தபோது, "இப்போதைய சூழலில், 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு நீட்டிப்பு குறித்த பரிசீலனை எதுவுமே அரிசிடம் இல்லை" என்று தெளிவுபடுத்தியிருந்தார்.

ரெப்போ விகிதம்: இந்நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், 2000 ரூபாய் நோட்டுகள் குறித்து ஒரு முக்கிய அப்டேட் தந்துள்ளார்.. 44வது நிதிக் கொள்கை மீளாய்வுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
"இந்திய ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஏப்ரல், ஜூன் மாதங்களைத் தொடர்ந்து இப்போதைய ஆகஸ்ட் மாதமும், 3வது முறையாக ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை பழைய நிலையிலேயே வைத்திருக்கிறது. அதாவது, ஜூன் மாதத்தில், ரெப்போ விகிதத்தை 6.5 சதவிகிதம் என்ற அளவே, இப்போதும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவது பெரும் பலன் அளிக்கும்.. அத்துடன், 2000 ரூபாய் நோட்டுகள் தொடர்பாக அரசு எடுத்த முடிவு உபரி பணப்புழக்கத்தை அதிகரித்துள்ளது.. 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டதால் பணப்புழக்கமும் அதிகரித்துள்ளது.
மொத்த மதிப்பு: இதுவரை 87 சதவீத 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பி வந்துள்ளன.. பணப்புழக்கம் என்பது கடனை சந்திக்க உடனடியாகக் கிடைக்கும் அல்லது முதலீட்டுக்கு பயன்படுத்தப்படும் தொகையை குறிக்கிறது. அத்துடன், இது பணத்தின் அளவையும் காட்டுகிறது. ஜூலை 31ம் தேதி வரை புழக்கத்தில் இருந்து வெளியேறிய ரூ.2000 நாடுகளின் மொத்த மதிப்பு, தற்போது ரூ.3.14 லட்சம் கோடி" என்றும் கூறினார்.












Click it and Unblock the Notifications