மாதம் ரூ.4 லட்சம் பத்தாது! முகமது ஷமியிடம் கூடுதல் பணம் கேட்கும் மாஜி மனைவி.. உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியும், அவரது மனைவி ஹசின் ஜஹான் ஆகியோர் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தான் முகமது ஷமி மாதந்தோறும் தனது மகளுக்கு ரூ.1.5லட்சமும், முன்னாள் மனைவி ஹசின் ஜஹானுக்கு ரூ.2.5 லட்சமும் வழங்க வேண்டும் என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் தான் மாதந்தோறும் கூடுதல் பணத்தை பராமரிப்பு தொகையாக வழங்க உத்தரவிட வேண்டும் என்று முன்னாள் மனைவி ஹசின் ஜஹான் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் முகமது ஷமிக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளாளராக இருப்பவர் முகமது ஷமி. இவருக்கு கடந்த 2014ம் ஆண்டில் திருமணம் நடந்தது. மனைவி பெயர் ஹசின் ஜஹான். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார்.

அதன்பிறகு முகமது ஷமி - ஹசின் ஜஹான் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. முகமது ஷமி தன்னை துன்புறுத்துவதாக அவர் போலீசில் புகாரளித்தார். அதன்பிறகு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் விவாகரத்தும் பெற்றனர்.
அப்போது நீதிமன்றம் மாதந்தோறும் முகமது ஷமி தனது முன்னாள் மனைவி ஹசின் ஜஹானுக்கு ரூ.50 ஆயிரம், மகளுக்கு ரூ.80 ஆயிரம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனை எதிர்த்தும், இந்த தொகையை அதிகரிக்க வேண்டும் என்றும் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதனை விசாரித்த உயர்நீதமின்றம் முகமது ஷமி தனது மகளின் பராமரிப்புக்கு மாதம் ரூ.1.50 லட்சம், ஹசின் ஜஹானுக்கு ரூ.2.50 லட்சம் வழங்க உத்தரவிட்டது. இதன்மூலம் முகமது ஷமி ரூ.4 லட்சம் மாதம் வழங்க வேண்டும்.
இந்நிலையில் முகமது ஷமியின் முன்னாள் மனைவி ஹசின் ஜஹான் ரூ.4 லட்சம் போதாது. இந்த தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில், ‛‛முகமது ஷமி இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பள பட்டியலில் ஏ பிரிவில் உள்ளார். அவருக்கு தனிப்பட்ட முறையில் நிறைய சொத்துகள் உள்ளன. இதனால் இந்த தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்தது. மாதம் ரூ.4 லட்சம் பராமரிப்பு தொகையாக வழங்குவது அதிகம் இல்லையா? என்று கேள்வி எழுப்பியது. அப்போது ஹசின் ஜஹான் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் சோபா குப்தா மற்றம் ஸ்ரீராம் பரகட் ஆகியோர், ‛‛நீதிமன்றம் பராமரிப்பு தொகையாக வழங்க கூறியதை விட முகமது ஷமியின் வருமானம் அதிகம் உள்ளது. அவர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அவரது மாதாந்திர செலவு ரூ.1.08 கோடி என்று உச்சநீதிமன்றத்தில் பிரமான பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.500 கோடி வரை இருக்கும் னெ்று கணக்கிடப்பட்டுள்ளது.
ஆனால் எனது கட்சிக்காரர் (முகமது ஷமியின் மாஜி மனைவி) தனது மைனர் குழந்தையுடன் வசித்து வருகிறது. அதோடு மனுதாரர் திருமணத்துக்கு பிறகு வேலையின்றி உள்ளார். அவருக்கு தினசரி தேவைகளையே பூர்த்தி செய்து கொள்ள வருமானம் இல்லை'' என்றார். இதையடுத்து உச்ச நீதிமன்றம், முகமது ஷமி மற்றும் மேற்கு வங்க அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இருவரும் 4 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனையடுத்து இந்த வழக்கின் மீதான விசாரணை அடுத்ததாக டிசம்பரில் நடைபெற உள்ளது.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications