ரூ.2000 மாத்திட்டீங்களா? 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்பபெறும் ரிசர்வ் வங்கி.. இந்த அப்டேட் பாருங்க
டெல்லி: 2000 ரூபாயை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்த நிலையில், முக்கிய தகவல் ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.. என்ன அது?
2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்திருந்தது.. இதையடுத்து, இந்த நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்யும் பணியும் துரிதமாக ஆரம்பமானது..

அவகாசம்: வருகிற செப்டம்பர் 30-ந் தேதி வரை இதற்கான கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.. ஆரம்பத்தில், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் டெபாசிட் செய்யும் பணி குறைவாகவே இருந்தது.. ஆனால், அடுத்தடுத்த நாட்களில் அதிக அளவில் டெபாசிட் செய்யப்படுவதாக கூறப்பட்டன..
மேலும், 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கான கால அவகாசம் குறித்த பரிசீலனை எதுவுமே அரிசிடம் இல்லை" என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி விளக்கம் தந்திருந்தார்.. இதனிடையே, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், 2000 ரூபாய் நோட்டுகள் குறித்து முக்கிய அப்டேட் ஒன்றை தந்திருந்தார்.
பணப்புழக்கம்: அதில், "2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவது பெரும் பலன் அளிக்கும்.. அத்துடன், 2000 ரூபாய் நோட்டுகள் தொடர்பாக அரசு எடுத்த முடிவு உபரி பணப்புழக்கத்தை அதிகரித்துள்ளது.. 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டதால் பணப்புழக்கமும் அதிகரித்துள்ளது. இதுவரை 87 சதவீத 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பி வந்துள்ளன.. பணப்புழக்கம் என்பது கடனை சந்திக்க உடனடியாகக் கிடைக்கும் அல்லது முதலீட்டுக்கு பயன்படுத்தப்படும் தொகையை குறிக்கிறது.
அத்துடன், இது பணத்தின் அளவையும் காட்டுகிறது. ஜூலை 31ம் தேதி வரை புழக்கத்தில் இருந்து வெளியேறிய ரூ.2000 நோட்டுகளின் மொத்த மதிப்பு, தற்போது ரூ.3.14 லட்சம் கோடி" என்று அறிவித்திருந்தார். இந்நிலையில், இன்னொரு அப்டேட்டை ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
பிசினஸ்மேன்: அதாவது, இப்போது வரையிலும் 88 சதவீத ரூ.2000 நோட்டுகள் வங்கிகளில் திரும்பப பெறப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.. இதில், நாட்டிலுள்ள சாமானிய பொதுமக்களை காட்டிலும், தொழிலதிபர்கள்தான் அதிக அளவில் ரூ.2000 நோட்டுக்களை வங்கிகளில் டெபாசிட் செய்திருக்கிறார்களாம். அதன்படி, 40 சதவீதம் 2000 ரூபாய் நோட்டுகள் வணிகர்களிடமிருந்து டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியாகி உள்ளது பலரது கவனத்தையும் திருப்பி வருகிறது.












Click it and Unblock the Notifications