2000 ரூபாய் மாத்திட்டீங்களா? ரூ.2000 நோட்டை திரும்பபெறும் ரிசர்வ் வங்கி.. வெளியான அடுத்த அப்டேட்
டெல்லி: 2000 ரூபாயை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்த நிலையில், முக்கிய தகவல் ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.. என்ன அது?
2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்திருந்தது.. இதையடுத்து, இந்த நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்யும் பணியும் துரிதமாக ஆரம்பமானது..

அவகாசம்: வருகிற செப்டம்பர் 30-ந் தேதி வரை இதற்கான கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.. ஆரம்பத்தில், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் டெபாசிட் செய்யும் பணி குறைவாகவே இருந்தது.. ஆனால், அடுத்தடுத்த நாட்களில் அதிக அளவில் டெபாசிட் செய்யப்படுவதாக கூறப்பட்டன..
மேலும், 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கான கால அவகாசம் குறித்த பரிசீலனை எதுவுமே அரிசிடம் இல்லை" என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி விளக்கம் தந்திருந்தார்..
இதனிடையே, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், 2000 ரூபாய் நோட்டுகள் குறித்து கூறும்போது, "2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவது பெரும் பலன் அளிக்கும்.. அத்துடன், 2000 ரூபாய் நோட்டுகள் தொடர்பாக அரசு எடுத்த முடிவு உபரி பணப்புழக்கத்தை அதிகரித்துள்ளது.. 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டதால் பணப்புழக்கமும் அதிகரித்துள்ளது" என்று தெரிவித்திருந்தார்.
டெபாசிட்: அதுமட்டுமல்ல, இதில், நாட்டிலுள்ள சாமானிய பொதுமக்களை காட்டிலும், தொழிலதிபர்கள்தான் அதிக அளவில் ரூ.2000 நோட்டுக்களை வங்கிகளில் டெபாசிட் செய்திருக்கிறார்களாம். அதன்படி, 40 சதவீதம் 2000 ரூபாய் நோட்டுகள் வணிகர்களிடமிருந்து டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக, ஏற்கனவே அறிக்கை ஒன்று வெளியாகி, பலரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்தது.
இந்நிலையில், 2,000 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது... டெபாசிட் மற்றும் இதர பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து வரும் செப்டம்பர் 30-ம் தேதி வரை 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் பெற்றுக் கொள்ளலாம்.
அதுமட்டுமல்ல, ஒரு நாளைக்கு ஒரு நபர் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை மட்டுமே மாற்ற முடியும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
மீண்டும் அலர்ட்: வரும் செப்டம்பர் 30-ம் தேதி தான் கடைசி தேதி என்பதால், கையிலுள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் தங்கள் கணக்கில் செலுத்திக் கொள்ள ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications